வினாவும் விடையும்
தேசிய தேர்வு முகமை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினேன். அதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு பணிகள், பொதுத்துறை, வங்கி, தனியார்துறை மற்றும் மாநில அரசுப் பணிகளுக்குமான பணியாளர்களை நியமனம் செய்வதற்காக தேசிய தேர்வு முகமையை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறதா? ஆம் என்றால் அதன் விவரம்?
முன்மொழியப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையை அமைப்பதற்கான தேவையும் காரணமும் என்ன? முன்மொழியப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை எப்போது நடைமுறைக்கு வரும்?
தேசிய தேர்வு முகமை என்பது தன்னாட்சி அமைப்பா? ஆம் என்றால் அதன் விவரம் என்ன? இல்லையென்றால் அதன் காரணம் என்ன ? தேசிய தேர்வு முகமை பணிநியமனம் செய்ய இருக்கும் துறைகளின் பட்டியல் மற்றும் பணியாளர் வகைகளின் பட்டியல்?
ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக மாநில தேர்வு மையங்கள் அமைக்கப்படுமா? அந்தஅந்த மாநிலத்திற்குரிய இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கபடுமா? ஆம் என்றால் அதன் விவரம்? ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.

