• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » எழுச்சித்தமிழரின் படைப்புகள்

எழுச்சித்தமிழரின் படைப்புகள்

அடங்க மறு

இந்நூலைக்குறித்து

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ‘இந்தியா டுடே’ வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Talisman என்ற பெயரில் நூலாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொகுப்பில் Talisman நூலைப் பற்றிய ஜி.கே. வாசன்., சி.மகேந்திரன், கவிஞர். காசி. ஆனந்தன், ரவிக்குமார், ராஜ்கௌதமன், முனைவர் அழகரசன் ஆகியோரது பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன்வைக்கிறோம்.

இந்நூலைக்குறித்து ஜி.கே. வாசன்.

மரியாதைக்குரிய திருமாவளவனைப் பற்றிப் பேசவேண்டுமென்றால் தலித் மக்களுக்கு அரணாகவும், தூணாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தலித் மக்களின் வாழ்விலே ஒளி தீபத்தை ஏற்ற வேண்டும் என்கிற எண்ணத்திலே, மிகச் சிறப்பான முறையிலே தமிழகத்திலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

இந்நூலைக்குறித்து சி. மகேந்திரன்.

]இது கட்டுரையாக ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் 34 வாரங்கள் வெளி வந்தது. அது வந்தபோது எல்லாவற்றையும் தோழர் நல்லகண்ணு அவர்கள் படித்து, படித்தது மட்டுமல்லாமல் அதிலிருக்கக்கூடிய சிறந்த அம்சங்களைப் பாராட்டி நம்முடைய அருமைத் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு தொலைபேசியிலே தொடர்புகொள்ளும் வழக்கத்தையும் வைத்திருந்தார். சி. மகேந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்நூலைக்குறித்து

வள்ளுவன் சொன்னான்:
ஒளவை சொன்னாள்
என்பதற்காக, சிலர் வலிந்து
நெளிந்து வாய்க்கு வந்த
கேடாய் ‘சாதி ஒழிக’ என்று
வாய்ச்சவடால் அடிப்பதுண்டு!
அப்படி வெறும் வாய்ச்சவடாலாய்
வாயாடி ஏய்க்காமல், கடைசி மனிதனின்
அடிவயிற்றில் கண்மூடி உறங்கும்.
கனல் கக்கும் எரிமலையைக்
கோடைப் புயலாய் ஊதி.
குமுறியெழவைக்கும் பணியில்
குறியாயிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள்.
தொல். திருமாவளவன்.

இந்நூலைக்குறித்து பாவலர் இன்குலாப்

ஆதிக்கம் செய்பவர்கள்
நெடுநேரம் பேசுகிறார்கள்
அலங்கரிக்கப்பட்ட சொற்களுடன்.
திருமாவளவன் எவ்வளவு
நேரம் பேசினாலும்
உண்மையைப் பேசுகிறார்.
மற்றவர்களின் இலட்சியம் பதவி.
திருமாவளவனின் இலட்சியம் விடுதலை.

இந்நூலைக்குறித்து

‘சாதி ஒழிப்பே தமிழ்த் தேச மக்கள் விடுதலை” ‘சாதியத்தை வேரறுப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்” என்று முழங்கி தமிழ்த்தேசியத்துக்குச் சாதி ஒழிப்பு என்கிற புதிய உள்ளடக்கத்தை வழங்கியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள். சாதி ஒழிப்பையும், தமிழ்த் தேசியத்தையும் இணைத்து முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் தனித்துவமானது. அதன் விளக்கமாக இருக்கிறது இந்நூல்.

தமிழர்களை இங்கே இருக்கின்ற தமிழ்த் தேசிய உணர்வு வழிநடத்தாமல் இங்கே இல்லாத திராவிடம் என்கிற கருத்து வழிநடத்துவதால் ஏற்படும் சிக்கல்களையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனின் ஆழமான அரசியல் பார்வைக்கு இந்நூலில் இடம்பெற்றுள்ள உரைகள் சான்றுகளாகும்.

எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன்வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தியலை எடுத்துச் சொல்வதாக மட்டுமின்றித் தமிழ்த் தேசிய அரசியலுக்குப் புதிய விளக்கமாகவும் அமைந்துள்ளது.

இந்நூலைக்குறித்து

இந்திய சனநாயகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குவது இந்துத்துவ அடிப்படை வாதமாகும். ஆங்கிலேயர் வருகைவரை இந்த நாட்டைக் காட்டுமிராண்டி காலச் சூழலில் அமிழ்த்தி வைத்திருந்த பிற்போக்குச் சக்திகள் சுதந்திரத்துக்குப் பிறகு மீண்டும் தலையடுக்க ஆரம்பித்துவிட்டன. பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னால் ஊக்கம் பெற்ற அந்த மதவாத சக்திகள் இந்திய சனநாயகத்தை மீண்டும் பழமைவாதச் சகதிக்குள் தள்ளிவிட்டன. அரசியலையும் நிர்வாகத்தையும் நீதி அமைப்புகளையும் மதவாதப் பேரிருள் சூழ்ந்துகொண்ட போது அதை எதிர்த்துக் களம் கண்டது விடுதலைச் சிறுத்தைகள். சமூக நீதி பேசியவர்கள் மதவாதத் தோடு ஒன்றுபட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்துத் தந்த வழியில் இந்து அடிப்படைவாத்ததை எதிர்த்து ஆற்றலோடு சமர்புரிந்தது விடுதலைச் சிறுத்தைகள். அந்தப் போராட்டங்களின் பதிவாக விளங்குகிறது இந்நூல். எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன் வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக மட்டுமின்றி இந்த நாட்டில் சனநாயகத்தை வேரூன்றச் செய்ய விரும்புவோர்க்குப் படைக்கலனாகவும் இருக்கிறது.

இந்நூலிலிருந்து சில வரிகள்

மதவெறியர்களின் கையிலே இன்று இந்திய நாடு சிக்கிக் கொண்டுள்ளது. இந்த மண்ணையும். மக்களையும் மீட்கக்கூடிய பெரும் பொறுப்பு முற்போக்குச் சக்திகளுக்கம் சனநாயக சக்திகளுக்கும் இருக்கிறது. மதவெறிக் கும்பலிடம் இருந்து இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.

இந்நூலிலிருந்து சில வரிகள்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன். மாவீரன் நெப்போலியனைப் போல. மாவீரன் அலெக்சாண்டரைப் போல இராணுவப் பாரம்பரியத்தில் தோன்றியவரல்ல!

இன்றைக்கு உலக வரலாற்றில் எவனாலும் சாதிக்க முடியாத மிகப்பெரும் சாதனைகளை சாதித்துக் கொண்டிருக்கின்ற ஒரு மாவீpரன். அவர் களத்திலே மோதிச் சாவாரே தவிர, நீங்கள் நினைப்பதைப்போல மண்டியிட்டு வாழ விரும்புகின்ற ஒரு கோழையல்ல!

நீ எத்தனை படைகளை வேண்டுமானாலும் கொண்டுபோ! எத்தனை ஆயிரம் வீரர்களைக் கொண்டுபோய் இறக்கினாலும் இறக்கு! இராஜீவ்காந்தி அன்று ஒரு இலட்சம் வீரர்களை இறக்கினார். அந்த ஒரு இலட்சம் வீரர்களையும் ஓடஓட விரட்டியடித்தவர்கள்தான் புலிகள்!

இந்நூலிலிருந்து சில வரிகள்

இலங்கையை ஆளும் பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களை எதிர்த்த தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தமது இன்னுயிரை ஈகம் செய்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். 1983இல் இனப்படுகொலை நடந்தபோது தாய்த்தமிழகம் தன்னெழுச்சியோடு முன்வந்து அல்லல்படும் ஈழமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. ஆனால் இந்திய ஆட்சியாளர்களின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகத் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் தொய்வு உண்டானது. ஈழப்பிரச்சினையை முன்வைத்து அரசியல் நடத்திய கட்சிகளும் கூட மௌனம் காத்தன.

தடா சட்டமும், பொடா சட்டமும் தமிழர்களின் வாயை அடைத்தபோது எத்தகைய அடக்குமுறை ஏவப்பட்டாலும் கவலையில்லை ஈழத்தமிழருக்கு ஆதரவு அளிப்போம் என அறிவித்தது விடுதலைச் சிறுத்தைகள். ‘ஈழம் வெல்லும் அதைக் காலம் சொல்லும்’ என்ற எழுச்சித் தமிழரின் முழக்கம் கொடுங்கோன்மை சட்டங்களைத் தூள் தூளாக்கியது மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஊக்கமாகவும் அமைந்தது. அது ஈழப்பிரச்சினைக்கான ஆதரவு மட்டுமல்ல. இந்திய சனநாயகத்தை மீட்பதற்கான உரிமைக்குரலும் ஆகும். அந்தக்குரலின் பதிவாக விளங்குகிறது இந்நூல்.

இந்நூலைக்குறித்து

எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன்வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக மட்டுமின்றி இந்த நாட்டில் சனநாயகத்தை வேரூன்றச் செய்ய விரும்புவோர்க்குப் படைக்கலனாகவும் இருக்கிறது.

இந்நூலிலிருந்து சில வரிகள்

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடுபடுகிற போராளிகள் தமது வரலாற்றையும் இதற்கு முன்னால் இந்த மக்களுக்காக உழைத்த மாமனிதர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. ‘வரலாற்றைத் தெரிந்து கொள்ளாத ஒருவரால் வரலாற்றை மாற்ற முடியாது’.

இதை உணர்ந்து தான் விடுதலைச் சிறுத்தைகள் மக்களுக்காக உழைத்த மாமனிதர்களை நினைவு கூர்ந்து நினைவிடங்களை உருவாக்குவது மட்டுமின்றி நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.

மக்களுக்கு உழைத்த மாமனிதர்களைப் பற்றி எழுச்சித் தமிழர் ஆற்றிய உரைகளும் எழுதிய கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பே இந்நூல். அம்பேத்கர், பெரியார், பகத்சிங், தோழர் ஜீவா, பெருந்தலைவர் காமராசர். கன்சிராம், தோழர் நல்லக்கண்ணு, சமத்துவப் பெரியார் கலைஞர் முதலானவர்களைப் பற்றிய எழுச்சித் தமழரின் பதிவுகளை இந்நூலில் காணலாம்.

இந்நூலைக்குறித்து

எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன் வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு கையேடாகத் திகழ்வது மட்டுமின்றித் தமிழக, இந்திய அரசியல் குறித்து அறிய விரும்பும் அனைவருக்கும் ஒரு பாடநூலாகவும் விளங்குகிறது.

இந்நூலிலிருந்து சில வரிகள்

இந்த நாட்டின் தொல்குடிமக்களைத் தாழ்த்தி ஒதுக்கிவைத்து அவர்களிடமிருந்து மண்ணுரிமையைப் பறித்துக் கொண்டார்கள். அவர்களது கல்வி உரிமையும் ஆயுதமேந்தும் உரிமையும்கூடப் பறிக்கப்பட்டன. அந்த ஒடுக்குமுறை இன்றளவும் பல்வேறு நுட்பமான வழிகளில் தொடர்கிறது. மண்ணின் மைந்தர்கள் மனைப்பட்டா கேட்டுக் போராடுகின்ற அவலம் உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தில் அடிப்படையாக இருக்கின்ற மண்ணுரிமைப் போரை சமரசமின்றி முன்னெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள். 2007 ஆம் ஆண்டு அதற்கென நெல்லையில் மாநாடு ஒன்றையும் நடத்தியது. அதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் கலைஞர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் ஒரு ‘மேஜர் ஜெனரல்’ எனப் பாராட்டினார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் மண்ணுரிமைப் போருக்கான நியாயங்களை எடுத்துச் சொல்கிறது இந்த நூல்.

எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன்வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக விளங்குவது மட்டுமின்றித் தமிழக அரசியலை ஆழமாகப் பயில விரும்பும் அனைவருக்கும் கிடைத்தற்கரிய ஆவணமாகத் திகழ்கிறது.

இந்நூலைக்குறித்து விகடன் பிரசுரம்

தொல். திருமாவளவன்
பெரம்பலூர் மாவட்டம், அங்கனூர் என்ற சிற்றூரில் பிறந்த திருமாவளவன்,எம்.ஏ. (கிரிமினாலஜி) படிப்புக்குப் பின், சென்னை சட்டக்கல்லூhயிpல் சட்டப்படிப்பை முடித்தார். தற்போது நெல்லை-மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
மாணவப்பருவம் தொட்டே ஈழப் பிரச்னையில் ஈடுபாடு கொண்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். மதுரை மலைச்சாமியின் மறைவுக்குப் பிறகு, அவர் நடத்தி வந்த பாரதிய தலித் பேந்தர்ஸ் இயக்கத்துக்குத் தலைமையேற்று, அதனை விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றி, கொடியையும் கொள்கையையும் உருவாக்கி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகமெங்கும் அக்கட்சியை பரவச் செய்து, இன்று அதை ஒரு அரசியல் சக்தியாக கட்டியமைத்திருக்கிறார்.
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளராக அறியப்படும் திருமாவளவன் சிறந்த எழுத்தாளரும்கூட. அவர் எழுதிய நூல்கள் பதினேழு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட Talisman, Uproot Hindutva என்ற இரண்டு நூல்கள், கொல்கத்தாவிலிருக்கும் சாம்யா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
2009 நாடாளுமன்ற தேர்தலில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திருமாவளவன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இலங்கை சென்றிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும், முன்னர் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசிய சூழலையும் முள்வலி… யில் பதிவு செய்திருக்கிறார்.

About this Book THE HINDU

These insightful essays cover a whole range of subjects pertaining to Tamil life, social, cultural, economic and political, besides highlighting the plight of the Dalits. who have been victims of caste-based discrimination and violence

About this Book SUDHA PAI

“The essays are not just a critique of the hierarchical social order and caste atrocities but of Indian democracy, the state and its instruments, the police, bureaucracy and judiciary.” SUDHA PAI, THE BOOK REVIEW

About this Book GAIL OMVEDT

“Thirumaavalavan, whose writings are translated here, has been one of the most militant and charismatic leaders of this new Dalit movement in Tamil Nadu, a movement which has fought for equality as well as intense intellectual debate. These articles show him as something more, an important intellectual, taking positions on the issues of women’s liberation. Tamil nationalism, economic rights, Indian and Tamil history, oppression and exploitation of Muslim and other minorities and the future of democracy.. (His evolving political position) is more consistent with Ambedkar’s own political leadership”

About this Book

‘Grassroots are gaining strength. Perhaps the most radical is the Dalit Panthers, a Tamil Nadu resistance organization based on the African. American Black Panthers. Led by Thirumaavalavan, whose stirring two hour rally speeches have made him something of a cult figure in the region, the panthers doesn’t openly advocate violence. But the group does encourage Dalits to protect their rights by any means if necessary.’ Cover story, ‘India’s Untouchables Fight for Their Rights’, Newsweek, 3 July 2000 As the leader of the Viduthalai Chiruthaigal, the Liberation Panthers. Thirumaavalavan brings the passion of his commitment to social justice to these speeches that have been translated from the Tamil into English for the first time. Fighting for the basic rights of the people of the cheris, whom he talks of with empathy as the lay people, the last man or last woman, those who get trampled on, murdered or raped at will because of the caste system, now bolstered by the ideology of Hindutva, these speeches get to the heart of the prevailing injustice in India’s democracy. Many of the appalling and almost indescribable atrocities have not been reported in the media, and thus the book provides a valuable record of what is taking place. Thirumaavalavan analyses the various roles of Hindutva in sustaining caste Hindu hegemony. He speaks provocatively of the need to counter Hindutva with a Tamil identity that can reach beyond its region to other oppressed peoples. He speaks of Eelam, of the refusal to be a Hindu and of the right to conversion, of the need to follow the guidelines of the Revolutionary Ambedkar, among other issues. Always unflinchingly honest, hard hitting, this collection reveals new currents in Dalit politics, continuing the debate raised in his book Talisman: Extreme Emotions of Dalit Liberation (2003).

இந்நூலைக்குறித்து

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடாற்றுகின்ற விடுதலைச் சிறுத்தைகள் முதலில் தேர்தல் பாதையைப் புறக்கணித்து வந்தது. 1999இல் தான் தேர்தல் பாதையில் அது அடியெடுத்து வைத்தது. எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சிறுத்தைகளின் குரலை வெகுசன ஊடகங்கள் புறக்கணித்தே வந்தன. அப்போதெல்லாம் சுவரொட்டிகளே சிறுத்தைகளின் ஊடகமாய் இருந்தன.

இன்று தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் வளர்ந்துவிட்ட போதிலும் அதன் அறிக்கைகள் அனைத்தும் வெகுசன ஊடகங்களில் இடம்பெறுவது இல்லை. கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசியல் நடப்புகள் குறித்து எழுச்சித் தமிழர் வெளியிட்ட அறிக்கைகளின் தொகுப்பாக (2006-2007) விளங்குகிறது இந்நூல்.

எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன்வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக மட்டுமின்றி இந்த நாட்டின் அரசியல் நிகழ்வுப் போக்குகள் எப்படி மாறிவந்துள்ளன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஆவணமாகவும் திகழ்கிறது.

இந்நூலைக்குறித்து

இந்தியா தமிழ்ச் சமூகத்திற்குத் துரோகம் இழைத்து விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக் கொண்டு எமது தமிழ்ச் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டும்….
திருமாவளவன்

இந்நூலைக்குறித்து

இந்த நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஐம்பது விழுக்காட்டினராக இருந்த போதிலும் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாகப் பெண்கள் இருக்கின்றனர். பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதற்கான இந்துச் சட்ட மசோதாவை இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாததைக் கண்டித்துதான் தான் வகித்து வந்த சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் புரட்சியாளர் அம்பேத்கர். அவரது வழியில் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கம் தான் விடுதலைச் சிறுத்தைகள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனத் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்த போது பெண்களும் அர்ச்சகராகலாம் என அதில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வாதிட்டது விடுதலைச் சிறுத்தைகள். மதுரையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தைக் கடலூரில் நடந்த திமுக மகளிரணி மாநாடும் வழிமொழிந்திருப்பது விடுதலைச் சிறுத்தைகளின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன் வைக்கிறோம். இந்நூல் பெண்ணுரிமை குறித்த விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் பார்வையை வெளிப்படுத்துவதாக மட்டுமின்றித் தமது உரிமைகளுக்காகப் போராடும் பெண்கள் அனைவருக்கும் கருத்தியல் ஆயுதமாகத் திகழ்கிறது.

இந்நூலைக்குறித்து

தமிழனுக்கென்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழம்தான். தமிழீழத்தை வெல்லுவதற்கு ஒரு படை வேண்டும். அது தமிழீழ விடுதலைப் புலிகள்தான். புலிகளை நடத்த ஒரு தலைவன் தேவை: அது மேதகு பிரபாகரன் தான். இந்த அரசியலை மக்களிடத்தில் பரப்புவதற்கு ஓர் இயக்கம் தேவை அது விடுதலைச் சிறுத்தைகள் தான். ஆகவே இந்தக் கருத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்கின்ற பணியைத் தொடர்ந்து செய்வோம்!

இந்நூலைக்குறித்து

தமிழகத்தின் கடந்த நூறு ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சி பெற்று ஒரு அரசியல் சக்தியாய் ஆகியிருப்பது எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனின் சாதனையாகும். ‘சாதிய முரண்பாடுகளைப் பற்றி விவாதிக்காமல். இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்காமல், எல்லோரும் பாட்டாளிகளாய் அல்லது தமிழர்களாய் அல்லது இந்துக்களாய் அல்லது சிறுபான்மையினராய் ஒன்றுபடுவோம் என்பது ஒன்று ஏமாற்று வேலையாக இருக்க வேண்டும் அல்லது முட்டாள்தனமாக இருக்க வேண்டும்’ என்ற எழுச்சித் தமிழரின் முழக்கம் சாதி ஒழிப்பு குறித்த தெளிவான பார்வையை முன் வைக்கிறது. இத்தகைய கருத்தாழமும் உணர்ச்சி வேகமும் கொண்ட உரைகளின் தொகுப்பே இந்நூல். எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன் வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளை எழுச்சி கொள்ள வைப்பது மட்டுமின்றி சாதி ஒழிப்பைக் கருத்தியல் ரீதியாக ஏற்றுக் கொண்ட சனநாயக சக்திகள் அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய கருத்துக் கருவூலமாகவும் திகழ்கிறது.

இந்நூலைக்குறித்து

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடாற்றுகின்ற விடுதலைச் சிறுத்தைகள் முதலில் தேர்தல் பாதையைப் புறக்கணித்து வந்தது. 1999 ல் தான் தேர்தல் பாதையில் அது அடியெடுத்து வைத்தது. எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சிறுத்தைகளின் குரலை வெகுசன ஊடகங்கள் புறக்கணித்தே வந்தன. அப்போதெல்லாம் சுவரொட்டிகளே சிறுத்தைகளின் ஊடகமாய் இருந்தன.

இன்று தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் வளர்ந்து விட்ட போதிலும் அதன் அறிக்கைகள் அனைத்தும் வெகுசன ஊடகங்களில் இடம் பெறுவது இல்லை. கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசியல் நடப்புகள் குறித்து எழுச்சித் தமிழர் வெளியிட்ட அறிக்கைகளின தொகுப்பாக விளங்குகிறது இந்நூல்.
எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன் வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக மட்டுமின்றி இந்த நாட்டின் அரசியல் நிகழ்வுப் போக்குகள் எப்படி மாறி வந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஆவணமாகவும் திகழ்கிறது.

இந்நூலைக்குறித்து

அ.தி.மு.க. தலைமையில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த அன்றைய அரசு மதமாற்றத் தடைச் சட்டம் என்ற கொடும் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆதை எதிர்த்துக் களம் கண்ட விடுதலைச் சிறுத்தைகள் முன் வைத்த போர் முறை தான் ‘இந்துப் பெயர்களை மாற்றுவோம், தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவோம்’ என்பதாகும். எழுச்சித் தமிழரின் அறைகூவலை ஏற்று ஆயிரக் கணக்கான தமிழர்கள் இந்துப் பெயரைத் துறந்து தமிழ்ப் பெயர்களை ஏற்றனர். இந்துத்துவத்தை எதிர்த்த போரில் புதிய உத்தியாக இது அமைந்துள்ளது.
திராவிட இயக்கம் எழுச்சி கண்ட காலத்தில் சமஸ்கிருதப் பெயர்களை மாற்றித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொள்ளுகிற நடைமுறை இருந்தது என்றாலும் அது வடமொழி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து செய்யப்பட்டதே தவிர இந்துத்துவ எதிர்ப்பு நிiலியலிருந்து மேற்கொள்ளப்பட்டதல்ல.

தமிழ் அடையாளத்தின் உள்ளீடாக இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் தனித்துவமானது. ஆதை எடுத்துகாட்டுவதாக அமைந்திருக்கிறது இந்நூல். எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன் வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக மட்டுமின்றி இந்த நாட்டில் சனநாயகத்தை வேரூன்றச் செய்ய விரும்புவோர்க்குப் படைக்கலனாகவும் இருக்கிறது.

கரிசல் பதிப்பகம்

இந்நூலைக்குறித்து

2001 ஆம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகளின் மாத இதழாக வெளிவரும் ‘தாய்மண்’ இதழில் எழுச்சித் தமிழர் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பே இந்நூல். இந்துத்துவம். துமிழ்த் தேசியம் முதலிய கருத்தியல் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமின்றி பாட்டாளி மக்கள் கட்சியோடான நட்புறவு, கூட்டணி அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் முதலிய நிகழ்கால அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும் இந்தத் தலையங்கங்கள் பேசுகின்றன.
தமிழக அரசியல் சூழல் ஒவ்வொன்றிலும் விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொண்ட நிலைப்பாட்டிற்குப் பின் புலமாய் அமைந்த காரணங்களை விளக்கிச் சொல்கின்றன இந்தத் தலையங்கங்கள்.
எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்லகளில் ஒன்றாக இதையும் முன் வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக மட்டுமின்றி இந்த நாட்டில் சனநாயகத்தை வேரூன்றச் செய்ய விரும்புவோர்க்குப் படைக்கலனாகவும் இருக்கிறது.
கரிசல் பதிப்பகம்

இந்நூலைக்குறித்து

தம்பி திருமாவளவனின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தை மேலும் கூர்மையாக்குவதுடன் தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் அவர்களை இணைக்கும். அவருக்குக் கைகொடுப்பது தமிழ்த் தேசியத்திற்குத் துணை நிற்பதாகும்…

இந்நூலைக்குறித்து

“…விடுதலைச் சிறுத்தைகள் என்னும் நமது இயக்கத்தின் பெயர். உச்சரிக்கும்போதே, எத்தகைய உணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டுகிறதோ, அதைப்போலவே ‘நமது தமிழ்மண்” என்னும் நமது இதழின் பெயரும் மட்டிலா மகிழ்ச்சியைத் தருகிறது. மண்ணின் மீதான உரிமையையும் ஆளுமையையும் வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்து உள்ளது.
எனது குடும்பம், எனது இல்;லம், எனது சொத்து என்று உரிமை கொண்டாடுவதில் எத்தகைய ஈடுபாட்டுணர்ச்சி ஏற்படுகிறதோ, அவற்றைப் பாதுகாத்து மேலாண்மை செய்ய வேண்டுமென்கிற பொறுப்புணர்ச்சி உருவாகிறதோ, அப்படி “நமது மண், நமது மொழி, நமது இனம், என்று சொந்தம் கொண்டாடும் உரிமையுணர்வுகளே அவற்றின் மீதான ஆளுமை உணர்ச்சிகளைப் பெருக்கும்!
இயக்கத்தின் மூலம் போர்க்குணத்தை வளர்ப்போம்! இதழின் மூலம் ஆளுமை உணர்வைப் பெருக்குவோம்!”

இந்நூலைக்குறித்து

தாழ்த்தப்பட்ட மக்களை மானம் உள்ள மனிதர்களாய்த் தலை நிமிர வைத்திருக்கும் மகத்தான தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் வழிநடத்துதலில் விடுதலைச் சிறுத்தைகள் இன்று தமிழக அரசியலைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருக்கிறது.
அரசியல் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொண்ட நிலைப்பாடுகள், நிறைவேற்றிய தீர்மானங்கள் விடுதலைச் சிறுத்தைகளை மட்டுமின்றித் தமிழக அரசியலையும் வடிவமைத்திருக்கிறது. அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களின் தொகுப்பே இந்நூல்.
எழுச்சித் தமிழர் பொது வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன் வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறு;தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக விளங்குவது மட்டுமின்றித் தமிழக அரசியலை ஆழமாகப் பயில விரும்பும் அனைவருக்கும் கிடைத்தற்கரிய ஆவணமாகத் திகழ்கிறது.

இந்நூலைக்குறித்து

“விடுதலை
கிடைப்பது
யுத்தத்தால்
புதிய
விதிகள்
பிறப்பது
இரத்தத்தால்”
கவிதைகள் தொகுப்பு
- வன்னி அரசு
தாய்மண் வெளியீட்டு மையம்

இந்நூலைக்குறித்து

அடங்க மறுப்போம்! அத்துமீறுவோம்! திமிறி எழுவோம்! திருப்பி அடிப்போம்! என்பது எழுச்சித் தமிழர் எழுதிய புதிய ஆத்திசூடியாகும். இந்த முழக்கம்தான் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களை வீறுகொண்டு கிளர்ந்தெழச் செய்திருக்கிறது. அரசியல் களத்தில் எந்தவொரு அடக்குமுறைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் பணிந்துபோனதில்லை. பொடா சட்டமாக இருந்தாலும் சரி. மதமாற்றத் தடைச் சட்டமாக இருந்தாலும் சரி, ஈழத்தைப் பற்றிப் பேசக் கூடாது என்ற வாய்ப்பூட்டு உத்தரவுகளானாலும் சரி அவற்றையெல்லாம் தகர்த்துத் தூளாக்கியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். அந்த வீரம் இருக்கிறது இந்நூல்.
விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் நிலையை ஆதரித்து இடதுசாரித் தலைவர்கள் பேசியவையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
எழுச்சித் தமிழர் பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைவதன் அடையாளமாக வெளியிடப்படும் 25 நூல்களில் ஒன்றாக இதையும் முன்வைக்கிறோம். இந்நூல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாக விளங்குவது மட்டுமின்றித் தமிழக அரசியலை ஆழமாகப் பயில விரும்பும் அனைவருக்கும் கிடைத்தற்கரிய ஆவணமாகத் திகழ்கிறது.

இந்நூலைக்குறித்து பேராசிரியர். பிரபா. கல்விமணி

விடுதலைச் சிறுத்தைகள் தோழர்களுக்கு மட்டுமின்றி…
ஒடுக்கப்பட்டோர் விடுதலையிலும், இந்துத்துவ எதிர்ப்பதிலும்
அக்கறையுள்ள அனைவரும் வாங்கி படிக்கவேண்டிய
பயனுள்ள நூல் இது.
பேராசிரியர். பிரபா. கல்விமணி
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சட்டம்
Print Friendly

© 2011 all rights reserved to VCK

Scroll to top