• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » ஆர்ப்பாட்டங்கள் » காட்டுமிராண்டி ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவித்திடு! – தலைவர் தொல்.திருமாவளவன்.

காட்டுமிராண்டி ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவித்திடு! – தலைவர் தொல்.திருமாவளவன்.

காட்டுமிராண்டி ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவித்திடு! – தலைவர் தொல்.திருமாவளவன்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் டெசோ அமைப்பின் போராட்டம் இன்று (05.03.2013) காலை நடந்தது. வள்ளுவர் கோட்டம் அருகே திரண்ட ஆயிரக்கணக்கானதிமுகவினர் மற்றும் தமிழன உணர்வாளர்கள், இலங்கை துணை தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தலைவர் தொல்.திருமாவளவன் சுப.வீரபாண்டியன், ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தலைவர் திருமாவளவன் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் கண்டன குரல் எழுப்ப, அனைவரும் அதனை முழக்கமிட்டனர். அவை வருமாறு:

போராட்டம் போராட்டம் டெசோ அமைப்பின் போராட்டம். இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம். கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் காட்டுமிராண்டி ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறோம். அறிவித்திடு அறிவித்திடு 12 வயது பாலகனான பாலச்சந்திரனை படுகொலை செய்த படுபாதகன் ராஜபச்சேவை, கொலைக்காரன் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவித்திடு. மத்திய அரசே மத்திய அரசே ஐ.நா. மனித உரிமை கவுன்சி-ல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்திடு.

மானமுள்ள தமிழனெல்லாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். ராஜபக்சேவே ராஜபச்சேவே எச்சரிக்கை எச்சரிக்கை. அடக்குமுறைகள் தூளாகும். ஆணவங்கள் தூளாகும். ஒன்றுபட்ட தமிழர்கள் முன்னே அடக்குமுறைகள் தூளாகும். மத்திய அரசே மத்திய அரசே இனவெறியன் ராஜபச்சேவை தட்டிக்கேள். இவ்வாறு முழக்கமிட்டனர்

காவல் துறையினர் பின்னர் அனைவரையும் கைது செய்தது.

Print Friendly

About The Author

Number of Entries : 603

Comments (2)

 • சீரைசிவா

  டெசொ அமைப்பின் போராட்டம் இலங்கை தூதரகத்திலா அல்லது வள்ளுவர் கோட்டதிலா?
  இருந்த இடத்திலே நின்று கொண்டு கைது செய்ய கெஞ்சிய ஸ்டாலின்
  இவை டெசொவிற்கு ஈழ ஆதரவு இனையதளகளின் tamilwin,cnn tamil,uthayan தலையங்கம்

  ராகுல்காந்தி யின் உரை “இந்தியா ஈழ தமிழர்களுக்கு நீதிகிடைக்க தமிழரின் பக்கம் நிற்கும் அந்த நீதி தமிழிழம் என்பதை ஏற்க முடியாதாம்(tamilwin 6.3.13)”
  இவை எல்லாம் கேட்டும் உங்கள் அரசியல் உத்தி மாற்ற வில்லை எனில் நீங்கள் தனிமை படுத்த படுவது உறுதி

  தனி ஈழ தீர்மாணத்தை முன்மொழிந்தால் அங்கு வாழும் தமிழருக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொன்னீர் ஆனால் நாடுகடந்த அரசு சுதந்திர சாசனம் எழுத முற்படுகிறது
  உங்களின் போலி அரசியல் வாதம் எம்மால் ஏற்று கொள்ள முடிய வில்லை
  காலத்தின் தேவையை உணருங்கள்
  நீங்கள் தனி நாட்டு தீர்மாணம் ஏற்றினால் நாளையே தனிநாடு கிடைக்க போகிறதா என்ன
  இந்த தனிநாட்டு தீர்மாணத்தை முன்மொழிந்தாலே நடுநிலையாளர்களின் மனங்களை வெல்லமுடியும் இல்லையேல் சாராயதை காட்டி கூட்டம் சேர்கும் தி.மு.கவின் கூட்டதையே உங்களால் பார்க முடியும்

  முக்கிய அரசியல் முடிவே எடுங்கள்

  Reply
 • சீரைசிவா

  தனி நாட்டு தீர்மாணம் முன்மொழியுங்கள் இல்லையெல் நீதிக்காக டெசொவில் இருந்து மட்டுமாவது வெளியேறுங்கள் தயவுசெய்து நாடக அரசியலை கைவிடுங்கள்

  Reply

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top