• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » கூட்டங்கள் » இந்தச் சிறுவனை விட்டு வைத்தால் இன்னொரு பிரபாகரனாக வருவான் என்று சுட்டுக் கொன்றனர் கொடியவர்கள்! சென்னைக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் முழக்கம்

இந்தச் சிறுவனை விட்டு வைத்தால் இன்னொரு பிரபாகரனாக வருவான் என்று சுட்டுக் கொன்றனர் கொடியவர்கள்! சென்னைக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் முழக்கம்

இந்தச் சிறுவனை விட்டு வைத்தால் இன்னொரு பிரபாகரனாக வருவான் என்று சுட்டுக் கொன்றனர் கொடியவர்கள்! சென்னைக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் முழக்கம்

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை ஏன் சுட்டுக் கொன்ற னர் இவன் பிரபாகரனின் மகன் – பிரபாகரனின் மரபணு இவன் ரத்தத்திலும் இருக்கும் – இப்பொழுதே இவனைக் கொல்லாவிட்டால் எதிர் காலத்தில் இன்னொரு பிரபாகரனாக தோன்றுவான் என்று கருதியே சுட்டுக் கொன்றனர் என்றார் தொல்.திருமா வளவன்.

சென்னை பெரியார் திடலில் 25.2.2013 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது:-

மிகப் பெரிய குற்றவாளியான ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு ஒருபுறம் – வீரப்பன் கூட்டாளிகளுக்குத் தூக்குத் தண்டனை இன்னொருபுறம் – என்ன விசித்திரம் இது.

மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தீனியைத் தின்று கொண்டிருந்த அந்தக் காட்சியைப் பார்த்தபோது அடி வயிறு எல்லாம் கலக்கியது.

இந்த நால்வரும் வீரப்பனை ஒரு முறை கூட சந்தித்ததே இல்லை. உண் மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வக்கில்லாத காவல்துறை, நிரபராதி களைப் பிடித்துத் தண்டிப்பது சரி யானதுதானா?

கண்ணிவெடியில் சிக்கியது எப்படி? யார் காரணம்?

கண்ணி வெடியில் 18 பேர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், இருவர் வனத்துறையைச் சேர்ந்தவர்கள், 16 பேர் அப்பாவி பொதுமக்கள்.

இவர்கள் வீரப்பனைத் தேடிச் சென்ற வாகனத்தில் வெடிமருந்து இருந்தது. வீரப்பன் வைத்த கண்ணி வெடியினால் காவல்துறை வாகனம் தூக்கி எறியப்பட்டது.

வாகனத்தில் இருந்த வெடி மருந்துகளும் கையெறிக் குண்டுகளும் வெடித்ததால்தான் காவல்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் உட் பட அவர்கள் சின்னா பின்னமானார் கள். இதில் கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

இந்தச் சம்பவத்துக்கும் இப் பொழுது தூக்குத் தண்டனை விதிக் கப்பட்டவர்களுக்கும் என்ன சம் பந்தம்? கீழ் நீதிமன்றத்தில் ஆயுள் தண் டனை, மேல் முறையீட்டில் தூக்குத் தண்டனையா? இது என்ன நியாயம்?

குடியரசுத் தலைவரிடம் அளிக் கப்பட்ட கருணை மனுவின் மீது முடிவு கூற குடியரசுத் தலைவர் அதிக காலத்தை எடுத்துக் கொண்டு விட்டார். சட்ட நிலையில் அப்படி எடுத்துக் கொண்டால் தூக்கை நிறை வேற்ற முடியாது என்று சொல்லப் படுகிறதே. அதே சட்ட நியாயம் இந்த வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல் லப்படுபவர்களுக்குப் பொருந்தாதா!
164 நாடுகள் மரண தண்டனை கூடாது என்று முடிவு செய்து விட் டன. அந்தப் பட்டியலில் இந்த திரா விடம் சேர வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

கருநாடக நடிகர் ராஜ்குமாரின் உயிரைக் காப்பாற்ற இரண்டு மாநிலங்கள் துடியாய்த் துடித்ததைப் பார்த்தோம். அதே நேரத்தில் இந்த நான்கு உயிர்கள் பற்றியும் கவலைப் பட வேண்டாமா?

பாலகன் பாலசந்திரனையும் அவருக்குப் பாதுகாவலராக சென்ற நான்கு பேர்களையும் சிங்கள இரா ணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்ற னரே. அந்தப் பாலகன் கண்முன்னே அந்த நான்கு பேர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு அதற்குப் பிறகு பால சந்திரனையும் மார்பில் குண்டுகள் துளைக்க சுட்டு மகிழ்ந்துள்ளனர்.

இன்று இவன் சிறுவனாக இருக் கலாம். பிரபாகரனின் மரபணு இவன் இரத்தத்தில் இருக்கத்தான் செய்யும். இவனை இப்பொழுது உயிரோடு விட்டுவிட்டால் எதிர்காலத்தில் இன்னொரு பிரபாகரனாக இவன் உருவாவான் என்று எண்ணியே படுகொலை செய்துள்ளனர். அரச பயங்கரவாதம் என்பது இதுதானே.

இந்தியாவில் 35 மாநிலங்கள் இருக் கின்றன. அதில் ஒரே ஒரு மாநிலமான தமிழ்நாடு மட்டும் பலவிதப் பிரச் சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

இலங்கையைப் பகைத்துக் கொள்ள முடியாதாம். நட்பு நாடு என்கிறார்கள் அப்படி சொல்லிவிட்டு தமிழ்நாட்டிலே அவர்களுக்குப் பயிற்சி கொடுப்போம் என்கிறார்களே!

இதுதான் தமிழ்நாட்டின் நிலை இந்த நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

இதற்கு அரசியல் காரணமும் இருக்கிறது. 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதனால் தமிழ் நாட்டுத் தமிழன் மீது மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் மீதும் கோபம் கொப் பளிக்கிறது. இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்ன தமிழ்நாடு எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறது.

இன்னும் 15 ஆண்டுகளில் தமிழ் நாடு பாலைவனமாகப் போகிறது. தண்ணீர் பிரச்சினை அதற்குக் காரண மாக இருக்கப் போகிறது. நம்மைச் சுற்றிலும் உள்ள மாநிலங்கள் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கின் றன. எதிர்காலத்தில் தண்ணீர் என்பது நமக்குப் பொதுப் பிரச்சினையாக இருக்கப் போகிறது.

தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டாமா? யாரோ சிலர் தூக்கிலிடப்படுகின்றனர் என்று நினைக்கலாமா என்றார் தொல்.திருமாவளவன் அவர்கள்.

Print Friendly

About The Author

Number of Entries : 603

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top