• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » ஆர்ப்பாட்டங்கள் » ஆசிட் வீச்சில் பலியான வித்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க எழுச்சித் தமிழர் கோரிக்கை

ஆசிட் வீச்சில் பலியான வித்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க எழுச்சித் தமிழர் கோரிக்கை

ஆசிட் வீச்சில் பலியான வித்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க எழுச்சித் தமிழர் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்,ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரிடம், வித்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.ஆசிட் வீச்சில் பலியான இளம்பெண் வித்யாவின் உடல் நேற்று மாலை 3.30 மணிக்கு ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்ரசேனன், தாம்பரம் ஆர்.டி.ஓ. எட்டியப்பன் ஆகியோர் வந்து பலியான வித்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.அப்போது மாவட்ட கலெக்டர் சித்ரசேனனிடம், வித்யா குடும்பத்தினர் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சில கோரிக்கைகளை வைத்தார். ‘‘ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த வித்யாவின் குடும்பத்தினருக்கு வருவாய் வரும் வகையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 310 பிரிவின் கீழ் உள்ள வழக்கை 311, 325 ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றவேண்டும். இதன் மூலம் அரசு உதவித்தொகை கிடைக்கும். வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும். குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வழக்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்து உரிய இழப்பீட்டினை உடனடியாகத் தரவேண்டும்.வித்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைத் தரவேண்டும்.ஈமச்சடங்கினைச் செய்வதற்கு உடனடி செலவை அரசு ஏற்க வேண்டும்.அதை சிறப்பு வழக்காக எடுத்து உரிய நிவாரணத்தை முதல்வர் வழங்க வேண்டும்.
’’ என்றார்.இந்த கோரிக்கைகளை கேட்ட மாவட்ட கலெக்டர் சித்ரசேனன், ‘‘தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தார்

Print Friendly

About The Author

Number of Entries : 302

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top