• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » கூட்டங்கள் » தலைவர்.திருமாவளவன் தலைமையில் சமூக பாதுகாப்பு தேசிய கருத்தரங்கு

தலைவர்.திருமாவளவன் தலைமையில் சமூக பாதுகாப்பு தேசிய கருத்தரங்கு

சமூக பாதுகாப்பு தேசிய கருத்தரங்கு திருமாவளவன் தலைமையில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை நிறுவனராக கொண்ட ‘இணை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் சமூக பாதுகாப்பு சட்டங்களும், நடை முறைகளும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு சென்னை தியாகராய நகரில் 20.1.13 அன்று காலை பி.டி.தியாகராயர் அரங்கில் நடந்தது.

கருத்தரங்கிற்கு திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். கொத்தடிமைகள் விடுதலை அமைப்பின் நிறுவனர் சுவாமி அட்னி வேஷ், புதுடெல்லி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் செயலாளர் கிருஷ்ணன், தேசிய தலித் கூட்டமைப்பு ரூத் மனோகரன், முன்னாள் துணைவேந்தர் வசந்த்தேவி, மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன், சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

 

Print Friendly

About The Author

Number of Entries : 189

Leave a Comment