இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் செய்தியாளர்களிடம்- எழுச்சித் தமிழர்
இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து
விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது
தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் சாலையை மறித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ‘அமெரிக்க அரசே அமெரிக்க அரசே தடை செய் தடை செய் முகமது நபியை இழிவுபடுத்தும் திரைப்படத்தை தடை செய்’, ‘இழிவுபடுத்தாதே இழிவுபடுத்தாதே முகமது நபியை இழிவுபடுத்தாதே’, ‘மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் ஒபாமாவே மன்னிப்புக் கேள்’, ‘அச்சுறுத்தாதே அச்சுறுத்தாதே இசுலாமியர்களை அச்சுறுத்தாதே’, ‘மிரட்டாதே மிரட்டாதே இசுலாமிய நாடுகளை மிரட்டாதே’ ஆகிய முழக்கங்களை தொல்.திருமாவளவன் எழுப்ப தொடர்ந்து சிறுத்தைகளும் முழங்கினர்.
நிறைவாக தொல்.திருமாவளவன் பேசும்போது, “முகமது நபியை இழிவுபடுத்தும் குறும்படத்தை உலகம் முழுவதும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும். யூ டியூப் போன்ற இணைய தளங்களிலும் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும். தொடர்ந்து இசுலாமியர்களை இழிவுபடுத்தும் போக்கு தொடருகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
