உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு.
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் என்ற தமிழ் அமைப்பு கடந்த 37 ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சி நோக்கி உலக அளவில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றது. இந்த அமைப்பும், 65 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி வரும் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை 25, 26 ஆகிய இரண்டு நாளில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது
இந்த மாநாட்டில் , மலர் வெளியீடு, கருத்தரங்கம், ஆய்வரங்கம், இசைநிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகள், சிறப்புரைகள், நடைபெற்றன
உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரு. இலட்சுமணன் அவர்களும், மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் ஔவை.நடராசன் அவர்களும், முனைவர் பொற்கோ அவர்களும், முனைவர் க.ப.அறவாணன் அவர்களும், முனைவர் ச.முத்துக்குமரன் அவர்களும், துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களும், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதி ராஜா, சிவஞானம் சிரீதரன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
மாநாட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.சு.துரைராசா(கனடா), உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
