சுகாதாரம் மற்றும் குடும்பநலம் தொடர்பான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் எழுச்சித்தமிழர் உரையாற்றினார்
பேரவைத்தலைவர் அவர்களே, வணக்கம்
வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை பெருமளவில் உள்ள நாடு நமது இந்தியா.போதிய ஊட்டச்சத்து இல்லாமையாலும் போதிய சுகாதார வசதி இல்லாமையாலும்,போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாமையாலும் ஏழை-எளிய மக்கள் எளிதில் நோய்வாய்படும் நிலை இங்கே உள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு எழுபத்திரண்டு மருத்துவர்கள் என்கின்ற விகிதத்தில் தான்.மருத்துவப்பணிகள் ,சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ,இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை ஐந்து கிலோ மீட்டருக்கு ஓன்று என்கின்ற வகையில் உயர்த்த வேண்டுகிறேன்.அடுத்து கடுமையான நோய்களுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித்தொகையின் அளவை ,மொத்தச்செலவில் ஐம்பது விழுக்காடு அளவுக்காவது உயர்த்தவேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் மேலும் தமிழில் நோயைக்கண்டறிந்து நோய் மூலம் அறிந்து அதற்கேற்ற மருத்துவம் அளித்திட வேண்டும் என்கின்ற கருத்தில்
ஒரு லட்சம் பேருக்கு எழுபத்திரண்டு மருத்துவர்கள் என்கின்ற விகிதத்தில் தான்.மருத்துவப்பணிகள் ,சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ,இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை ஐந்து கிலோ மீட்டருக்கு ஓன்று என்கின்ற வகையில் உயர்த்த வேண்டுகிறேன்.அடுத்து கடுமையான நோய்களுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித்தொகையின் அளவை ,மொத்தச்செலவில் ஐம்பது விழுக்காடு அளவுக்காவது உயர்த்தவேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் மேலும் தமிழில் நோயைக்கண்டறிந்து நோய் மூலம் அறிந்து அதற்கேற்ற மருத்துவம் அளித்திட வேண்டும் என்கின்ற கருத்தில்நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல் என்று அய்யன் திருவள்ளுவர் கூறியிருக்கிறார் அத்தகைய பாரம்பரியமுள்ள சித்த மருத்துவத்தை இந்தியா அளவில் பரவச் செய்திட அரசு முன்வரவேண்டும் அவ்வாரே அலோபதி மருத்துவமனையிலும் சித்தா,ஆயுர்வேதம்,யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளுக்கான பிரிவுகளை உருவாக்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் அதற்கேற்ற வகையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் .நிறைவாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விடும்புகிறேன் ,அதாவது புதுடில்லியிலிருப்பதை போல AIIMS எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஒன்றை தமிழகத்தில் உருவாக்க வேண்டுமென கேட்டு நிறைவு செய்கிறேன் நன்றி.
