• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » ஆகத்து 17 தலைவர் திருமா பிறந்தநாளில் பொற்காசுகள் வழங்கும் விழா கோயம்பேடு-video

ஆகத்து 17 தலைவர் திருமா பிறந்தநாளில் பொற்காசுகள் வழங்கும் விழா கோயம்பேடு-video

ஆகத்து 17 -எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் “தமிழர் எழுச்சி நாள்” என்று சிறுத்தைகள் கொண்டாடிவருகிறார்கள் .இந்த ஆண்டு எழுச்சித்தமிழர் 50வது பிறந்தநாளை பொன்விழா ஆண்டு என பிரகடனபடுத்தி தமிழகம் முழுவதும் பொற்காசுகளை வழங்கி வருகிறார்கள்.

ஆகத்து 17 அவரது பிறந்தநாளில் காலையில் இருந்து தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் ,கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். மாலை 5 மணிக்கு கோயம்பேட்டில் வேலை செய்யும் பழ வியாபாரிகளும் ,காய்கறி வியாபாரிகளும் ஒருங்கிணைத்திருந்த பொற்காசு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சுமார் 100 பவுன் பொற்காசுகளை பெற்றார்.மலேசியா தமிழர்களும் மேடைக்கு வந்து எழுச்சித்தமிழர் அவர்களிடம் வீரவாள் ஒன்றை பரிசாக வழங்கினார்கள்.
பின்னர் 1 மணி நேரத்திற்கு மேலாக தன் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.
Print Friendly

About The Author

Number of Entries : 191

Leave a Comment