• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » போராளித்தலைவன் பொன்விழா தொல் திருமா உரை -video

போராளித்தலைவன் பொன்விழா தொல் திருமா உரை -video

தலைவர் தொல்.திருமாவளவனின் 50-வது பிறந்தநாள் விழா மற்றும் பொன் விழா கவியரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அன்று 16.8.12   மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கவியரங்கத்துக்கு, கவிஞர் வாலி தலைமை தாங்கி வாழ்த்தி பேசினார்.

கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கவிஞர் கபிலனின் `தொல்காப்பியம் எழுதிய பிள்ளைத்தமிழ்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். கவிஞர்கள் பழநிபாரதி, கபிலன், யுகபாரதி, இளையகம்பன், அண்ணாமலை, தமிழமுதன் ஆகியோர் கவிதை படித்தனர்.
இதையடுத்து, 50-வது பிறந்தநாள் விழா காணும் தொல்.திருமாவளவனுக்கு தொண்டர்கள் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொல்.திருமாவளவனின் எடைக்கு எடை ரூபாய் நாணயம் மற்றும் முக்கனிகளை தொண்டர்கள் பரிசாக வழங்கினார்கள். தொடர்ந்து கவியரங்கம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு தொல்.திருமாவளவன் பிரமாண்ட கருப்பட்டி வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.நிகழ்ச்சி இறுதியில் தலைவர் திருமா அவர்கள் சுமார் 50  நிமிடம் உரையாற்றினார்

Print Friendly

About The Author

Number of Entries : 189

Leave a Comment