• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » மாநாடுகள் » டெசோ மாநாடு தொல் திருமா உரை -video

டெசோ மாநாடு தொல் திருமா உரை -video

டெசோ அமைப்பு சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுவதை யொட்டி தியாகரா யநகர் அக்கார்டு ஓட்டலில் நேற்று 12.8.12 காலை 10 மணிக்கு ஆய்வரங்கம் நடைபெற்றது.

 தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஆய்வரங்கம் நடந்தது தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி, டெசோ உறுப்பினர் சுப.வீர பாண்டியன், சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வரங்கத்தில் மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஏ.வ.வேலு, பொன்முடி.

மொராக்கோ, நைஜீரியா, ஸ்வீடன், கனடா, இங்கி லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மனித உரிமை அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்வை முடித்துக்கொண்டு அன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கையில் தமிழ்மொழி அடையளாங்கள் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். சிங்களர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை மீட்க வேண்டும். தமிழர் மறுவாழ்வு நடவடிக் கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு தேவை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு காண ஜ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஐ.நாவை வலியுறுத்த வேண்டும்.

தமிழர் பகுதியிலிருந்து ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு இந்தியா எந்த மாநிலத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.மாநாட்டில் எழுச்சித்தமிழர் பேசும்பொழுது தனி ஈழம் தான் அனைத்து சிக்கலுக்கும் ஒரே தீர்வு. ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் என பேசி முடித்தார்.

Print Friendly

About The Author

Number of Entries : 603

Comments (1)

  • சீரைசிவா

    கச்சதீவு மீட்பு குறித்து எந்த கட்சியும் பேசவில்லையே!
    ராமதாசிடம் இருந்து அம்பேத்கார் விருதை பரித்தால் அவர் முழு தலித் எதிரியாக மாறிவிடுவார் மேலும் அந்த விருதை வைத்துகொண்டு தலித் எதிரான செயலில் இடுபட்டால் வரலாறு அவரை பழிக்கும்

    அவரின் கடிவாளமாக அம்பேத்கர் விருது உள்ளது

    Reply

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top