• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » ஆர்ப்பாட்டங்கள் » மதுரையில் தலைவர்கள் சிலைகள் உடைப்பு தொல் திருமா தலைமையில் ஆர்ப்பாட்ட காணொளி (video)

மதுரையில் தலைவர்கள் சிலைகள் உடைப்பு தொல் திருமா தலைமையில் ஆர்ப்பாட்ட காணொளி (video)

தென் மாவட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து மதுரையில் இன்று 10.8.12 தலைவர் தொல்.திருமா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தென் மாவட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து மதுரையில் இன்று 10.8.12 தலைவர் தொல்.திருமா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மதுரை, விமான நிலையம் அருகிலுள்ள சின்ன உடைப்பு கிராமத்தினரால் நிறுவப்பட்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கரின் இரண்டு சிலைகளையும் மாவீரன் இம்மானுவேல் சேகரனின் சிலையையும் உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும் செப்டம்பர் 14குள் அரசே மூன்று வெண்கல சிலையை நிறுவ வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் இன்று 10.8.12 காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த மாபெரும் ஆர்பாட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட்ட 5000 மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். எழுச்சித் தமிழர் பேசும்பொழுது விடுதலைச் சிறுத்தைகள் எப்பொழுதும் வன்முறையில் ஈடுபடாமல் புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் போராடுபவர்கள், விரைவில் உடைத்த மூன்று வெண்கல சிலைகளையும் நிறுவவேண்டும் இல்லையென்றால் விமான மறியல் போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கையில் எடுக்கும் என ஆவேசமாக பேசினார்.

 

 

Print Friendly

About The Author

Number of Entries : 603

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top