• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » அறிக்கைகள்

பல்கலைக்கழகங்களில் பணம்-சாதி-அரசியல்! பணி நியமனங்களில் இடஒதுக்கீடு இல்லை! குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

தமிழகத்தில் 19 அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணிநியமனத்தில் அனைத்து மட்டத்திலும் முறையான இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. ...

மேலும் படிக்க

13வது சட்டத் திருத்தம் – ரணில் அறிவிப்பு இடைக்காலத் தீர்வுதான் தமிழீழமே நிலையான தீர்வு! உலகத் தமிழர்கள் தமது போராட்டத்தைத் தொடர வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

இலங்கையில் சிங்கள அரசின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்னும் அடிப்படையில், 1987ஆம் ஆண்டு உருவான ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.  அதன்படி தமிழர்களின் தாய ...

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு என்னும் ஏறுதழுவுதல் விளையாட்டை மீண்டும் நடத்திட தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் ஏறு தழுவுதல் தமிழர்களின் பாரம்பரியமான வீரவிளையாட்டாகும். இதற்கு மிருகவதை என்னும் பெயரில் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காளையை அடக்கும் வீரவிளையாட்டில் காளைகள் பாதிக்கப்படுவதில்லை ...

மேலும் படிக்க

கொடுங்கோலன் இராஜபக்சேவின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறோம்! ஈழத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு கிடைத்திட தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட தமிழர் திருநாளில் உறுதியேற்போம்! தொல்.திருமாவளவன் பொங்கல் வாழ்த்து!

தமிழினத்தின் பாரம்பரியமான பொங்கல் திருநாள் உழைப்பைப் போற்றும் உன்னத நாளாகும். குறிப்பாக, பசிப் பிணி நீக்கும் பயிர்த் தொழிலைச் செய்யும் உழவர்களின் உழைப்பையும், உழவுக்குத் துணை செய்யும் எருதுகளின் உழைப்பையும் போற்றி வணங்கும் பெருவிழாவாகும். ...

மேலும் படிக்க

இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது சாதியமே! உலக வங்கியின் தலைவரின் பேச்சை இந்தியர்கள் உணரவேண்டும்! தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துணைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த மைய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைத்த 7வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் (வைப்ரன்ட் குஜராத்) பங்கேற்ற உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், “முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கான வழி வகைகளை மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது” என்று கூறினார். ...

மேலும் படிக்க

சாக்சி மகாராஜின் வகுப்புவாதப் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்! பிரதமர் மோடி மௌனம் கலைத்து வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

பாரதிய சனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்த அரி என்கிற சாக்சி மகாராஜ் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டிவிடுகிற வகையிலும் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலும் பேசியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ...

மேலும் படிக்க

ராஜபக்சவை தோற்கடித்த இலங்கை மக்களுக்கு நன்றி! புதிய அரசு தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவேண்டும்! தொல். திருமாவளவன் வேண்டுகோள்!

இலங்கை அதிபருக்கான தேர்தலில் இனப்படுகொலைக்குற்றவாளியான கொடுங்கோலன் ராசபக்சேவை தண்டித்த இலங்கை மக்களை குறிப்பாக, தமிழ் மக்களை விடுதலைச்சிறுத்தைகள் பாராட்டுகிறது. தமிழ் மக்களிடையே மட்டுமின்றி சிங்கள மக்களிடையேயும் ராசபக்சே தம்முடைய நடவடிக்கைகளால் வெறுப்பை சம்பாதித்துள்ளார் என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து நிரூபனமாகியுள்ளது. ...

மேலும் படிக்க

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு மலையைச் சிதைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கையையும் அழிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியிலுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு, தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையிலும் மைய அமைச்சரவை    ஒப்புதல் அளித்துள்ளதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ...

மேலும் படிக்க

ஈரோட்டில் வன்முறையைத் தூண்டும் சுவரொட்டி சிறுபான்மைச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் மதவெறிக் கும்பலைச் சிறைப்படுத்து! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இந்து முன்னனி எனும் பெயரில் ஈரோடு மாவட்டத்தில் இசுலாமியச் சமூகத்தைச்  சார்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் தொடர்புக்கு தங்களது தொலைபேசி எண்களையும் அச்சுவரொட்டியில் அச்சிட்டுள்ளனர். ...

மேலும் படிக்க

முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல்: தமிழகத்திலும் தலைவிரித்தாடும் மதவெறியாட்டம்! தொல்.திருமாவளவன் கண்டனம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை கிராமத்தில் ஒரு மதவாத வன்முறைக் கும்பல் இசுலாமியருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.  ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top