loader
Foto

என்ன தவம் செய்தோமோ - ஏழை மக்களை நேசிக்கும் ஒருவரை தலைவனாக பெற்றமைக்கு !

நெகிழ்ந்து போகிறேன்!

கணவனை இழந்த இளம் விதவை - சகோதரி நளினி - அவர்தம் 2 பிள்ளைகளை வளர்க்க இயலாத ஏழ்மை நிலையில் வாடினதால் தனது மூத்த மகன் வெங்கடேசு பாபுவை யேனும் ( வயது 10) லாரன்ஸ் அவர்களின் Trust இல் சேர்த்து படிக்கவைத்துவிட வேண்டும் என 2 மாதமாக போராடியிருக்கிறார்!

ஒரு சில காரணங்களால் லாரன்ஸ் அவர்களின் Trust நிர்வாகம் இந்த வருடம் சேர்த்துக்கொள்ள இயலாது என கை விரித்தனர்!

உடன் - நளினி எமது தலைவர் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து - தனது மகனை நல்ல ஒரு trust இல் சேர்த்து படிக்கவைக்கவேண்டுமென கண்ணீரோடுக் கேட்டார்!.

அந்த ஏழை சகோதரியின் இயலாத நிலை அறிந்த தலைவர் உடன் கொஞ்சமும் மறுக்காமல் - தோழர் லாரன்ஸ் அவர்களின் தனிச்செயலாளரோடு அலைப்பேசியில் பேசி - அந்தக் குழந்தையை trust இல் சேர்த்து படிக்கவைக்குமாறு பரிந்துரை செய்ததோடு - பரிந்துரைக் கடிதமும் கொடுத்து அனுப்பினார்!

இன்று நேரில் நளினி மற்றும் குழந்தையோடு லாரன்ஸ் அவர்களின் trust கு நான்( செங்கொடி) போயிருந்தேன்!

எம் தலைவர் மீது கொண்ட அன்பால் - அவர்களது Trust இல் பிள்ளையை சேர்த்துக்கொள்ள இயலாத நிலைக்கு வருந்தி " நல் மனம் - வில்லிவாக்கம் " Trust பற்றி சொல்லி அனுப்பினார்கள்!

தலைவர் அவர்களின் மேலான முயற்சியால் - " நல்மனம் ", Trust இல் இன்று வெங்கடேசுபாபு வை சேர்த்து வந்தோம்!

நளினி மிகுந்த மகிழ்ச்சியோடு - பல மாதம் நடந்தேன் - எவரும் மதிக்கவில்லை!

தலைவர் பெயர் சொல்லி சென்றேன் - எவரும் விரட்டவில்லை ! என நெகிழ்ச்சியோடு கூறினார்!

என்ன தவம் செய்தோமோ - ஏழை மக்களை நேசிக்கும் ஒருவரை தலைவனாக பெற்றமைக்கு !

Manibalan
VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

வருகிற 08.07.2017 மதுரை வடபழஞ்சி மாவீரன்முத்தமிழன் படுகொலை கண்டித்தும் மோடி அரசின் வரிவிதிப்பை கண்டித்தும் சாதிவெறியர்களால் மதுரை சின்னஉடைப்பு உள்ளிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும் தொடர்ந்து தலித்கள் சாதிவெறியர்களால் தாக்கப்படுவதை கண்டித்தும்...

foto
Authoor: Chandra Sekar

leave a reply

Recent Posts

Political News

Categories

VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

more headlines in our related posts

latest # news