சுற்றறிக்கை
~~~~~~~~~~~~

முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைத் தளங்களைப் பயன்படுத்தும் நமது கட்சியின் பொறுப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு தமது கருத்துகளைப் பதிவு செய்யவேண்டும். குறிப்பாக, கட்சிப் பொறுப்பாளர்களுக்கிடையிலான கருத்து மாறுபாடுகள், நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பான விவரங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொதுத் தளங்களில் பதிவிடக்கூடாது.

அத்தகைய சிக்கல்கள் குறித்து கட்சித் தலைமையின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும். இவற்றைக் கையாளுவதற்கென அமைக்கப்பட்டுள்ள “ஒழுங்குநடவடிக்கை குழு”விடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவேண்டும்.

புகாரின் அடிப்படையில் தேவைப்பட்டால் இருதரப்பாரும் அழைக்கப்பட்டு உரிய விதிமுறைகளின்படி விசாரிக்கப்பட்டு அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய நடைமுறைகளுக்கு நமது கட்சியின் பொறுப்பாளர்கள் கட்டுப்பட்டு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

இதற்கு மாறாக, சமூகவலைத் தளங்களில் உட்கட்சி சிக்கல்களைப் பதிவுசெய்யும் போக்கு கட்சியின் நலன்களுக்கும் தலைமைக்கும் எதிரான, மிகவும் தீங்கான நடவடிக்கைகளாகும். இதனைக் கட்சித் தோழர்கள் முற்றிலும் கைவிட வேண்டும்.

இந்த அறிவிப்புக்குப் பின்னரும் மீறி செயல்படுவோர் மீது உடனடியாக ஒழுங்குநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பதிவிடுவது மட்டுமின்றி பிறரின் பதிவைப் பகிர்வதும் ஒழுங்குநடவடிக்கைக்குரிய குற்றச்செயல்களே ஆகும்.

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.