#பெரியார்_ஒளி_விருது_பெற்ற_ஆந்திர_மக்கள்_பாடகர்_கத்தார்_அவர்கள்_ஆற்றிய_உரை: * தமிழத்தில் தலை சிறந்த தலைவராக திருமாவளவன் திகழ்ந்து வருகிறார். * தமிழக மண்ணில் இப்படிப்பட்ட ஒரு போராட்ட குணம் படைத்த தலைவர் இந்த தலைமுறையில் இருப்பது தமிழ் மண்ணுக்கே பெருமை. * என் முதுகில் 6 துப்பாக்கிய குண்டுகள் இருந்தது, அதில் 5 எடுத்து விட்டார்கள், மீதி ஒன்று இன்னும் என் முதுகில் உள்ளது. மருத்துவர்கள் என்னை தொலைதூர பயணம் செய்ய கூடாது என வலியுறுத்தி உள்ளார்கள். ஆனாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கும் இந்த விருதினை திருமா கையில் பெறுவதை பெருமையாக கருதி இங்கு வந்துள்ளேன். * சமூகம் சார்ந்த பாடல்களுக்காக எனக்கு இரண்டு விருதுகள் வழங்கி இருக்கிறார்கள். ஒன்று பெண் விடுதலைக்கான பாடல், மற்றும் தெலுங்கான சமூக மக்களுக்கான பாடலுக்கு வழங்கப்பட்டது. * இந்த இரண்டு விருதுகளை நான் மிகவும் பெருமையாக கருதினேன், அதன் பிறகு விசிக வழங்கும் இந்த விருதினை மிகவும் பெருமையாக கருதுகிறேன். * தமிழகத்தில் விசிக சமத்துவமான சமூகத்தை அமைக்க பாடுபட்டுக் கொண்டு வருகிறது. இதற்கு விசிகயுடன் நானும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.