loader
Foto

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலியம் இரசாயன மண்டலம் அமைக்கும் முடிவை கைவிடுக - தொல்.திருமாவளவன். 

இரண்டு மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 7,8 தேதிகளில் மக்கள் கருத்தறியும் பயணம். 

கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் இந்தத் திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பைக் கைவிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம். 

காவிரியில் நீர் வராத காரணத்தினாலும் வரலாறு காணாத வறட்சியினாலும் கடலூர், நாகை மாவட்டங்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் வீழ்ச்சியடைந்து விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டு மடியும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காணாமல், இந்த மாவட்டங்களில் விவசாயத் தொழிலை முற்றாக அழிக்கும் விதமாக பெட்ரோலிய இரசாயன மண்டலத்தைத் தமிழக அரசு கொண்டுவர முயற்சிக்கிறது. இந்த மண்டலம் அமைக்கப்பட்டால் இந்த 45 கிராமங்களைச் சார்ந்த மக்களும் அகதிகளாக விரட்டப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. நிலத்தை நம்பியிருக்கும் இலட்சகணக்கான மக்கள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய அவல நிலை உருவாகும். இதை யாரும் ஏற்றுகொள்ளமாட்டார்கள். 

கடலூர் நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கப்படவுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களது கருத்தை அறிவதற்காக ஆகத்து 7,8 தேதிகளில் நான் பயணம் மேற்கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன். ஆகத்து 7ஆம் தேதி கடலூர் மாவட்டத்திலும் 8ஆம் தேதி நாகை மாவட்டத்திலும் கிராம மக்களை நேரில் சந்திக்கவுள்ளேன் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன். 

விரைவில்.. #விடுதலைச்சிறுத்தைகளின் ஏடு செய்தித்தாள் மாதம் மும்முறை

இவண்: தொல். திருமாவளவன், நிறுவனர்- தலைவர், விசிக. 29.07.2017
VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

வருகிற 08.07.2017 மதுரை வடபழஞ்சி மாவீரன்முத்தமிழன் படுகொலை கண்டித்தும் மோடி அரசின் வரிவிதிப்பை கண்டித்தும் சாதிவெறியர்களால் மதுரை சின்னஉடைப்பு உள்ளிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும் தொடர்ந்து தலித்கள் சாதிவெறியர்களால் தாக்கப்படுவதை கண்டித்தும்...

foto
Authoor: Chandra Sekar

leave a reply

Shere this NEWS

Recent Posts

Political News

Categories

VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

more headlines in our related posts

latest # news