loader
Foto

விரைவில்.. #விடுதலைச்சிறுத்தைகளின் ஏடு செய்தித்தாள் மாதம் மும்முறை

ஒவ்வொரு நொடியும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக களமாடி வரும் எழுச்சித்தமிழரின் கடும் உழைப்பு முழுவதும் பதிவாவதில்லை.

30 நாட்களுக்கு ஒருமுறை.. அதுவும் சில பக்கங்களோடு மட்டுமே நமது தமிழ்மண்ணில் சுருங்கிவிடுகிறது.

பெரும்பான்மையான போராட்டங்களும் முன்வைக்கும் கோரிக்கைகளும் பதிவுகளாக மாறுவதில்லை. அவை பாதுகாக்கப்படுவதும் இல்லை.

அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து உழைக்கும் ஒப்பற்றத் தலைவர் எழுச்சித்தமிழரின் விடுதலைப்பயணமும் வரலாற்றுக்காலமும் இனியும் தாமதமின்றி எழுத்துகளாக மாற்றப்பட வேண்டும்.

பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கர், இரட்டைமலை உள்ளிட்ட பல நம் முன்னோடிகளின் எழுத்துகளும் பேச்சுகளும் அன்றைய காலகட்டத்திலே ஆவணப்படுத்தப்பட்டதால் தான் இன்று நம் கைகளில் விடுதலைக்கான கருவிகளாகக் கணக்கின்றன.

ஆகவே, இன்றைய நவீன அறிவியல் காலத்தில் நாம் இதனை செய்யவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது. எதிர்காலம் நம்மை மதிக்காது.

எனவே, எழுச்சித்தமிழரின் அரசியல் பயணத்தைப் பதிய, முன்னெடுக்கும் கூர்மையான உத்திகளை கடைசிமனிதனிடம் ஒப்படைக்க, அடித்தட்டு மக்களை அரசியல் சக்தியாய் அணிதிரட்ட, கருத்தியல் புரட்சி தொடங்க, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, நமக்கென்று ஒரு ஏடு( செய்தித்தாள் வடிவில்) விரைவில் தேவை என்பதை உணர்வோம். முதல் முயற்சியாய் மாதம் மும்முறை ஏடு.

அடுத்த தலைமுறைக்கு நம் போராட்டத்தையும் கோரிக்கையையும் கொண்டு சேர்ப்போம். விடுதலைக்கான ஆயுதமாய் அதைப் புரிய வைப்போம். ஊடகத்தைப் பயன்படுத்தத் தெரியாமல்..அதிகாரத்தை நுகர முடியாது.

ஆதரவால் இணைவோம்! தலைவரின் கருத்தால் எழுவோம்!!

விரைவில்.. #விடுதலைச்சிறுத்தைகளின் ஏடு செய்தித்தாள் மாதம் மும்முறை

இவண்: #பூவிழியன் ( பொறுப்பாசிரியர் நமது தமிழ்மண் ) 29.07.2017
VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

வருகிற 08.07.2017 மதுரை வடபழஞ்சி மாவீரன்முத்தமிழன் படுகொலை கண்டித்தும் மோடி அரசின் வரிவிதிப்பை கண்டித்தும் சாதிவெறியர்களால் மதுரை சின்னஉடைப்பு உள்ளிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும் தொடர்ந்து தலித்கள் சாதிவெறியர்களால் தாக்கப்படுவதை கண்டித்தும்...

foto
Authoor: Chandra Sekar

leave a reply

Shere this NEWS

Recent Posts

Political News

Categories

VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

more headlines in our related posts

latest # news