loader
Foto

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்து உள்ளது திருப்பஞ்சலி கிராமம். இந்த ஊரைச்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்து உள்ளது திருப்பஞ்சலி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கணேசன். தலித் இளைஞரான அவருக்கு 22 வயது. ஆட்டோ ஓட்டுநராக இருந்துவந்தார். இந்நிலையில் அதே பகுதியில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாய்களை, கடந்த சில மாதங்களுக்கு முன் கணேசன் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தங்கராசுவின் தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் மீண்டும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

தோட்டத்துக்குச் சென்ற தங்கரசு தனது தென்னைமரம், மாமரம் போன்ற மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் உடைந்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். வீட்டிற்கு வந்த தங்கரசு தனது மகன்கள் பாஸ்கர், சுரேஷ் ஆகியோருடன் கதிரேசன் வீட்டிற்குச் சென்று கதிரேசனை தேடியுள்ளனர். கதிரேசன் வீட்டில் இல்லாத நிலையில், கடை வீதியில் அவரை பார்த்துள்ளனர். கதிரேசனை பார்த்த தங்கராசுவும் அவரது மகன்களும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து ஓடிவந்த கதிரேசன் மனைவி நந்தினி, அவர்களை தடுத்துள்ளார். அவரை தங்கராசு மற்றும் அவரது மகன்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அதனையும் மீறி கதிரேசனை கயிற்றால் கட்டி மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி இழுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் கதிரேசனின் மனைவி நந்தினி மற்றும் அவரது உறவினர்கள், மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு கதிரேசன் இல்லை. அதனையடுத்து நந்தினி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர், தங்கராசு அவரது மகன்கள் சுரேஷ், பாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, 'கடைவீதியில் வைத்து கதிரேசனை அடித்து, கயிற்றால் கட்டி தங்கள் தோட்டத்துக்கு கொண்டு சென்று, கட்டிவைத்து அடித்தோம்.

அதன்பிறகு முகத்தில் கல்லைப் போட்டு அவனைக் கொன்றோம். இறந்துப்போன கதிரேசன் சடலத்தை, தோட்டத்திலே வீசி விட்டு வீட்டுக்கு வந்தோம்' என்று தங்கராசு மற்றும் அவரசு மகன்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். காவல்துறையினர், தங்கராசுவின் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, கதிரேசன் கைகள் கட்டப்பட்டு உடல் முழுக்க காயங்களுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்விற்காக ஶ்ரீரங்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் கதிரேசனின் உறவினர்களும், பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். கதிரேசன் இறந்ததை அவரது மனைவி நந்தினி மற்றும் உறவினர்களிடம் மாலை 5 மணி வரை தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்து உள்ளது திருப்பஞ்சலி கிராமம். இந்த ஊரைச்

Manibalan
VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

வருகிற 08.07.2017 மதுரை வடபழஞ்சி மாவீரன்முத்தமிழன் படுகொலை கண்டித்தும் மோடி அரசின் வரிவிதிப்பை கண்டித்தும் சாதிவெறியர்களால் மதுரை சின்னஉடைப்பு உள்ளிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும் தொடர்ந்து தலித்கள் சாதிவெறியர்களால் தாக்கப்படுவதை கண்டித்தும்...

foto
Authoor: Chandra Sekar

leave a reply

Shere this NEWS

Recent Posts

Political News

Categories

VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

more headlines in our related posts

latest # news