loader
Foto

மானுட சமத்துவமே இஸ்லாம்! -தொல்.திருமாவளவன்

இஸ்லாம் என்பது மானுடத்தை நெறிப்படுத்தும் ஒரு மகத்தான வாழ்வியல் கோட்பாடாகும்.

அது, உருவமில்லா ஓரிறை ஏற்பு(கலிமா), அன்றாடம் ஐவேளை தொழுகை(நமாஸ்), புனிதமிகு ரமலான் நோன்பு, புகழ்மிகு மெக்கா பயணம்(ஹஜ்), நலிந்தோர் நலன்பெற நன்கொடை(ஜக்காத்) என, தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்வாழ்நாளில் பின்பற்ற வேண்டிய ஐவகை கடமைகளைப் போதிக்கிறது. இவற்றின் அடிப்படையை ஆழ்ந்து நோக்கினால் நபிகள் நாயகத்தின் அதிநுட்பமான தொலைநோக்குப் பார்வைவையை அறிந்துகொள்ள இயலும்.

ஐவகை கடமைகளில் இறைவழிபாட்டையே மனிதனின் முதல் கடமையாக முன்வைக்கிறது இஸ்லாம். ஏனெனில், இறையச்சமே மனிதனை நெறிப்படுத்துவதற்கான வலுமிகு உத்தியென அது நம்புகிறது. இறைநம்பிக்கையிலிருந்தே இறையச்சம் உருவாக முடியும். இறையின் மீது நம்பிக்கை இல்லையெனில் இறையச்சம் என்பதற்கு வாய்ப்பில்லை. இறைநம்பிக்கையும் இறையச்சமும் மனிதனை ஒரு நெறிமுறைக்குள் உள்வாங்கும் என்பதே இஸ்லாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.

அத்தகைய இறைநம்பிக்கையும் எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பற்றியும் இஸ்லாம் மிக நுட்பமாகவும் தெளிவாகவும் வரையறை செய்கிறது. அதாவது, இறை என்பது 'பல' வாக இருக்கமுடியாது என்றும், 'உரு' வாக இருக்கமுடியாது என்றும் உறுதிபட கூறுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்டவையாகவோ பல்வேறு உருவங்களைக் கொண்டவையாகவோ இருப்பின், அது மனிதனின் விருப்புகளுக்கேற்ப, கற்பனைகளுக்கேற்ப கால ஓட்டத்தில் பல்வேறு திரிபுநிலைகளுக்கு ஆளாகி அதன் மூலத்தை இழக்கநேரும் என்பதே இஸ்லாம் உணர்த்த விரும்புவதாகும்.

இறை என்பது மனிதர்களை ஒருங்கிணைக்கக்கூடியதாக, ஒற்றுமைப்படுத்தக்கூடியதாக இருத்தல் வேண்டுமேயொழிய, மாறாக, மனிதர்களைப் பிளவுப்படுத்தி, முரண்களையும் மோதல்களையும் பெருக்குவதாக இருத்தல் கூடாது என்பதே இஸ்லாமியத்தின் நோக்கமாகும்.

மனிதர்கள் பிறப்பால் பல்வேறு உருவங்கள் மற்றும் வடிவங்களையும், பண்பாட்டால் பல்வேறு அடையாளங்களையும் கொண்டிருப்பதால், ஏற்கனவே பல்வேறு முரண்பாடுகளையும் மோதல்களையும் கொண்டிருக்கிறார்கள். இவற்றினிடையில், இறையின் பெயராலும் மனிதர்கள் முரண்படுவது கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாகவுள்ளது.

ஓரிறை என்கிற போது அதற்கு உருவமே தேவைப்படாது. ஒன்றுக்கும் மேற்பட்டவை எனில் அவை ஒன்றைப்போல் இல்லையென்பது உறுதியாகிறது. அவ்வாறு ஒன்றைப்போல் இல்லாமல், ஒன்றுக்கொன்று வேறுப்பட்டவை என்கிறபோது, அவ்வேறுபாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. எனவே, ஒவ்வொன்றுக்கும் உருவம் தேவைப்படுகிறது. உருவம் தேவைப்படுகிறபோது, அது ஆணா, பெண்ணா என்கிற கேள்வி எழுகிறது. இந்நிலையில், ஆணும் தேவை, பெண்ணும் தேவை என்பது தவிர்க்க இயலாததாகிறது. அதன்படி, ஆணென்றாலும் பெண்ணென்றாலும் அவர்கள், என்னமொழி? என்ன இனம்? என்ன குலம்? என்ன மதம்? என்ன கலாச்சாரம்? போன்ற ஏராளமான கேள்விகள் எழுவது இயல்பாகிறது. ஏனெனில், மனிதர்கள் இவ்வாறான வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால், அவரவருக்கான இறையினை, அவரவருக்குரிய கலாச்சார அடையாளங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட வேண்டிய தேவை எழுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட இறை என்கிறபோது இவ்வாறு எண்ணற்ற உருவங்களையும் வடிவங்களையும் படைத்திட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இந்நிலையில், மனிதன் தன்னைப்போலவே தான் நம்பும் இறையின் உருவத்தையும் வடிவத்தையும் படைத்திட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். தான் உடுத்தும் ஆடைகளைப் போலவே, தான் ஏந்தும் ஆயுதங்களைப் போலவே, தான் அணியும் ஆபரணங்களைப் போலவே, தான் நம்பும் இறையின் மீது அவற்றையெல்லாம் போர்த்துகிறான். அமைதியின் உருவில், கருணையின் வடிவில், பயங்கர நிலையில், பழிவாங்கும் வெறியில் என தன் விருப்பங்களையெல்லாம் இறையின் மீது திணிக்கிறான்.

இவ்வாறு, மனிதர்கள் தமது விருப்பு வெறுப்புகளைத் தாம் வணங்கும் இறையின்மீது பூசுவதால், மனிதர்களிடையே நிலவும் முரண்பாடுகளும் அவரவரின் இறையின் மீதும் படிகின்றன. இதனால்தான் இறையின் பெயரால், இறைக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடிக்கின்றன. அவ்வப்போது வழிபாட்டுத்தலங்களை இடிக்கும் வெறியாட்டங்களும் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை யாதெனில், ஓரிறைக்கு மாறாக, பல்வேறு இறைகளை ஏற்பதும், அவற்றுக்கு உருவங்களையும் வடிவங்களையும் படைப்பதேயாகும்.

பிரபஞ்சத்தைப் படைக்கும் பேராற்றலே இறை என்னும் நம்பிக்கைக்கு முரணாக இறையினையே தன் விருப்பம்போல் மனிதன் படைப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. அதாவது, இதுதான் இறை, இப்படித்தான் இறை,இங்கேதான் இறை என்று இறைக்கு இணை வைப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. அதுவும் மனித உருவத்தில் சிலை வடித்து இறைக்கு இணை வைக்கும்போக்கானது, காலப்போக்கில் மனிதனையே இறை அவதாரம் எனக்கூறும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை முன்னுரைக்கிறது இஸ்லாம்.

மானுட சமத்துவமே இஸ்லாம்! -தொல்.திருமாவளவன்

Manibalan
VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

வருகிற 08.07.2017 மதுரை வடபழஞ்சி மாவீரன்முத்தமிழன் படுகொலை கண்டித்தும் மோடி அரசின் வரிவிதிப்பை கண்டித்தும் சாதிவெறியர்களால் மதுரை சின்னஉடைப்பு உள்ளிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும் தொடர்ந்து தலித்கள் சாதிவெறியர்களால் தாக்கப்படுவதை கண்டித்தும்...

foto
Authoor: Chandra Sekar

leave a reply

Recent Posts

Political News

Categories

VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

more headlines in our related posts

latest # news