loader
VCK

‘நீட்’ நுழைவுத் தேர்வு சூலை 12ஆம் நாள் தமிழகமெங்கும் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்

விடுதலைச்சிறுத்தைகள் திரளாக பங்கேற்க தொல்.திருமாவளவன் அழைப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் செயல்படும் ‘சனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின்’ சார்பில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு குறித்து, கடந்த 04.07.2017 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மமக, இ.யூ.மு.லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் பங்கேற்றன. அக்கூட்டத்தில், ‘நீட்’ நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக்கோரி தமிழக அரசு இயற்றியுள்ள சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது குறித்து அக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும்; தமிழக அரசு இயற்றியுள்ள சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மாநிலப் பட்டியலில் மீண்டும் இணைத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சூலை 12ஆம் நாள் ‘மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்’ நடத்துவதெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக மாணவர்கள் பங்கேற்க வேண்டுமெனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, சூலை 12ஆம் நாள் தமிழகமெங்கும் நடைபெறும் ஆர்ப்பட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் பெரும் அளவில் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் உணர்வை மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவரணியினரும் பெருவாரியாகப் பங்கேற்றிட வேண்டுமெனவும் அழைப்புவிடுக்கிறேன். தமிழக முதலமைச்சர் அவர்கள், உடனடியாக தில்லிக்குச் சென்று ‘நீட்’ தொடர்பான தமிழக அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

இவண், தொல்.திருமாவளவன் நிறுவனர் தலைவர், விசிக.

‘நீட்’ நுழைவுத் தேர்வு சூலை 12ஆம் நாள் தமிழகமெங்கும் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்

இவண், தொல்.திருமாவளவன் நிறுவனர் தலைவர், விசிக.
VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

வருகிற 08.07.2017 மதுரை வடபழஞ்சி மாவீரன்முத்தமிழன் படுகொலை கண்டித்தும் மோடி அரசின் வரிவிதிப்பை கண்டித்தும் சாதிவெறியர்களால் மதுரை சின்னஉடைப்பு உள்ளிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும் தொடர்ந்து தலித்கள் சாதிவெறியர்களால் தாக்கப்படுவதை கண்டித்தும்...

VCK
Authoor: Chandra Sekar

leave a reply

Recent Posts

Political News

Categories

VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

more headlines in our related posts

latest # news