வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மறைவு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரங்கல்!
~~~~~~~~~~~~~~~~~~~~
வன்னியர் சங்கத் தலைவரும் பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
காடுவெட்டி குரு உடல் நலிவுற்று காலமானார் என்ற செய்தி அறிந்து
அதிர்ச்சியடைந்தோம்.மறைந்த அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில்
எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

தமிழ் பாதுகாப்பு இயக்கம் செயல்பட்ட காலத்திலும் 2011ஆம் ஆண்டு
சட்டமன்றத் தேர்தலின் போதும் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு
கிடைத்தது. 2011 – தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் வாக்குகளே காரணம் என்று நெகிழ்வோடு தெரிவித்து
நன்றி பாராட்டினார்.

அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால் அவர் தமிழ்ப் பாதுகாப்பு
இயக்கம் மற்றும் தேர்தல் களங்களில் எம்மோடு நல்லிணக்கமாக பணியாற்றியது
என்றும் நினைவுகூரத் தக்கதாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார்
உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் – தலைவர்,
விசிக.