மே – 18 சர்வதேச இனப்படுகொலை நாள்
…..
விடுதலைச்சிறுத்தைகளின் வீரவணக்க நினைவேந்தல் கூட்டம்

தலைமை : தலைவர் ,தொல்.திருமாவளவன் அவர்கள் 
..
நாள் : 18.5.18
இடம் : சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடல்
நேரம் : மாலை 4 மணி.

சிங்கள பேரினவாத அரசு பல்வேறு நாடுகளில் இராணுவத்துணையோடு தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் மீதும் பொது மக்களின் மீதும் போரை நடத்தியது.தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள இராணுவத்தை எதிர்த்து சிதறடித்த தமிழீழ மண்ணில் சர்வதேச இராணுவப்படைகள் நடத்திய கொடூர இறுதிக்கட்ட போரில் சமரசமில்லாமல் போரிட்ட புலிகளும் பொது மக்களும் தோல்வியை தழுவ நேரிட்டது. கொத்து  குண்டுகள் தாக்குதலால்  இலட்சக்கணக்கான குழந்தைகளும் பொது மக்களும் போரில் இறக்க நேரிட்டது .உலகமே வாய்மூடி கிடந்த நிலையில் தமிழீனத்திற்கு துரோகம் நடந்த போரில் இறுதி நாளான 2009  மே -18 சர்வதேச இனப்படுகொலை நாளாக
தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிவித்தார்.

 

 

முள்ளிவாய்கால் போரில் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத அரசை சர்வதேச சமூத்திடம் அம்பலப்படுத்தி சர்வதேச நாடுகளில் ஆதரவை பெறவேண்டி உள்ளது .புலிகளின் வீரத்தையும் தீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பைப் போற்றவும்
தமிழீழ விடுதலை களத்தை தொடர்ந்து அடைகாக்கவும் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தமிழீழ விடுதலைக்களத்தில் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கு நாளை மாலை 4 மணிக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அனைத்து விடுதலைச்சிறுத்தைகளும் தவறாமல் பங்கேற்கவும்