மத்திய  சென்னை சேப்பாக்கம் தொகுதி 62வது வட்டச் செயலாளர்  ம.செந்தில் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் ந.செல்லத்துரை  முன்னிலையில் நடைபெற்ற கட்சியின் கல்வெட்டு திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத்தலைவர் தொல் .திருமாவளவன்  அவர்கள் இன்று கலந்துக்கொண்டு சிறப்பித்தார் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தனி அதிகாரியை நியமனம் செய்வது தமிழக அரசின் அத்துமீறல் என்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரானது என்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் & திமுக தலைவர் கருணாநிதியையும் & மு.க. ஸ்டாலினையும் சந்தித்து பேசியதை வரவேற்பதாகவும் தென்மாநிலங்களுக்கு இடையிலான உறவை இச்சந்திப்பு வலுப்படுத்தும் எனவும் ,மூன்றாவது அணி குறித்த பேச்சுவார்த்தை – தற்போது பொருந்தாது என்றும் ,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த கோரி தேசிய அளவில் மே 1 அன்று – நடைபெறும் போராட்டத்தில் டெல்லியில் பங்கேற்பதாகவும் ,

 

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது சனநாயகத்திற்கு விரோதமானது என குற்றம்சாட்டியதோடு – தமிழக அரசு இம்முடிவை பரிசீலிக்க வேண்டும் எனவும் பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர் திருமா அவர்கள் கேட்டுக்கொண்டார்!