விழுப்புரம்: ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, பெரவள்ளூரைச் சேர்ந்தவர் மாணவி பிரதீபா. பிளஸ் 2 தேர்வில், 1,125 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வும் எழுதியிருந்தார்.நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. பிரதீபா, 39 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தார். இதனால், அவர் தேர்ச்சி பெறவில்லை.மனமுடைந்த பிரதீபா, எலி மருந்தை சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி பிரதீபா இறந்தார்.மாணவி.பிரதீபா திருவுடலுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் அன்று பிற்பகல்  மலர்வளையம் அஞ்சலி செலுத்தியபின் அவருக்கான இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது . அதில் உரையாற்றிய தலைவர் அவர்கள் இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்