பேராசிரியர் கல்விமணி அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
திண்டிவனம் பகுதியில் உள்ள இருளர் பழங்குடி மக்களுக்காகவும் தலித்துகளின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் மனித உரிமை போராளி ஆவார்.தலித் சமூகத்தை சார்ந்தவர் அல்ல.ஆனால் தமிழகம் முழுக்க தலித் மற்றும் பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். தாய்தமிழ் கல்விக்காக பள்ளி ஒன்றை நடத்தி வருபவர்.

 

 

 

 

 

 

2003 ஆம் ஆண்டு,திண்டிவனம் அருகே உள்ள ரோசனை காவல்நிலையத்துக்கு உட்பட்ட ‘பட்டணம்’
கிராமத்தைச்சார்ந்த இருளர் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் ஊர்த்தெருவில் உள்ள கடைக்குச்சென்று பொருள் வாங்க சென்றுள்ளார்.
கடைக்கு முன்பிருந்த பாமகவைச்சார்ந்த வன்னியர் ஒருவர், இருளர் சமூகத்தைச்சார்ந்த அந்த சகோதரரை சாதியை சொல்லி அடித்து துன்புறுத்தி உள்ளார்.இச்செய்தியை கேள்விப்பட்ட பேரா.கல்விமணி அவர்கள் ரோசனை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட
இருளர் சகோதரரை அழைத்துப்போய்  புகார் செய்கிறார்.

வழக்கம் போல போலீசு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத்தடுப்பு
சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறது.நீண்ட போராட்டத்துக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
சாதிவெறியன் தலைமறைவாகிறான்.இந்த சூழலில் ரோசனை சேரியை சார்ந்த ஏழுமலை என்பவரை ( அதிமுகவைச்சார்ந்தவர்)
பாமகவினர் அணுகி பஞ்சாயத்து பண்ண அனுப்புகின்றனர்.பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.
வழக்கை திரும்ப பெறக்கோரி போலீசும் மிரட்டுகிறது.ஆனாலும் வழக்கு வாபஸ் பெற வில்லை.
சரி, என்ன செய்யலாம் என்று தைலாபுரம் தோட்டத்தில் சதி ஆலோசனை நடக்கிறது.
அதன்படி, ஏழுமலை ரோசனை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கிறார்.
அந்த புகாரில்,” பேரா.கல்விமணி வீட்டுக்கு போனபோது என்னை “போடா பற நாயே” என்று சாதியை சொல்லி திட்டி அடித்து அவமதிப்பு செய்து விட்டார்” என்று புகார் செய்தார்.இந்த புகாரின் பேரில் அவசர அவசரமாக ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

யார் மீது?

தலித்துகளுக்காகவும்  பழங்குடி மக்களுக்காகவும்  காலங்காலமாக களமாடிய அய்யா கல்விமணி அவர்கள் மீது,
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாய்ந்தது. இந்த பொய் புகாரை ரத்து செய்ய வலியுறுத்தி
விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் களத்தில் இறங்கி போராடின.
தலைவர் திருமாவளவன் அவர்களே திண்டிவனம் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு பேரா.கல்விமணி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தினார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வழக்கு திரும்ப பெறப்பட்டது.
இப்போது சொல்லுங்கள் தாழத்தப்பபட்டோர் மற்றும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை
தவறாக பயன்படுத்தியது யார்? தலித்துகளா?
காவல்துறையா? சாதிவெறி அமைப்பான பாமக வா? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.நிலைமை இப்படி இருக்க
சாதிய மனநோயாளியான ராமதாசு, “சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது.
ஆகவே, உச்ச நீதிமன்றத்தீர்ப்பு சரிதான்”
என்று மீண்டும் தலித்துகளுக்கு எதிரான வன்மத்தை கக்குகிறார்.

தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீது தினமும் கொலை வெறித்தாக்குதல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தலித் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
தலித்துகளுக்கு பாதுகாப்பாற்ற சூழலை சாதியவாதிகள் உருவாக்கி வரும் சூழலில், இச்சட்டம் மட்டுமே ஓரளவுக்கு பாதுகாப்பாகவும் ஆறுதலாகவும் உள்ளது. ஆனாலும் இச்சட்டம் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை.
புகார்களை பதிவு செய்வதில்லை. இச்சட்டத்தின் கீழ் இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதாக கூட
எந்த சான்றும் இல்லை. இந்த லட்ணத்தில் தான் மனநோயாளி ராமதாசு
இப்படி ஒரு தவறான குற்றச்சாட்டை பரப்புகிறார்.
ஒரு சில சாதிய தமிழ்த்தேசியவாதிகள்
பேசும் போது, “ராமதாசு திருந்தி வருகிறார்.
அவரோடு இணைந்து செயல் படவேண்டும்”
என்று கூறுகின்றனர்.

 

நாய் வாலை சிலர்
நிமிர்த்த முயற்சிக்கின்றனர்.

அது ஒருபோதும்
வெற்றி பெறாது.
மனநோயாளி ராமதாசின்
இந்த நச்சு எண்ணத்தை
புரிந்து கொண்டு
தமிழகத்து இயக்கங்களும்
முற்போக்கு இயக்கங்களும்
அரசியல் கட்சிகளும்
மன நோயாளி ராமதாசை
தமிழக அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

– வன்னி அரசு