தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரம் மாக இழுத்துமூடக்  கோரி விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துத்துக்குடி டி .டி.வி  சிக்னல் அருகில் தலைவர் தொல் .திருமாவளவன் அவர்களின்  தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

https://www.facebook.com/thiruma.dinesh.5/videos/893193774223401

 தலைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஆற்றிய உரையின்  சுருக்கம் :
……………………
உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளே உங்கள் அனைவருக்கும் எனது பனிவான வணக்கம் .
இந்த ஆர்ப்பாட்டம் வழக்கமான கோரிக்கைகளை கொண்ட ஆர்ப்பாட்டம் அல்ல இது வாழ்வா சாவா ? என்கிற அடையாளத்தோடு நடத்தப்படுகிற ஆர்ப்பாட்டம் அரசின் தவறான கொள்கைகளால் அல்லது ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படுக்கிற பல்வேறு தீங்குகளில் இதுவும் ஒன்று.
சராசரி மக்கள் உழைக்கத்தெரியும் ஒட்டுப்போட தெரியும் மற்றப்படி அரசு எத்தகைய கொள்கை கோட்பாடுகள் கொண்டுள்ளன என்பது சாதாரண மக்களுக்கு தெரியாது . ஸ்டெர்லெயிட்  நிறுவனம் இங்கே வந்தப்போது நல்லதா கேட்டதா ! நம்மால் உடனடியாக புரிந்துக்கொள்ள இயலாது.அதனால் தான் இங்கே அமைத்துவிட்டார்கள். அப்படி எத்தனையோ திட்டங்கள் மக்களுக்கான திட்டம் என்கிற  பெயரால் மக்களுக்கு எதிரான பல திட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிடுகின்றன .

 

கூடங்குளம் அனுவுலை திட்டம் அப்படித்தான் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள் சரிவரட்டும் என்று நாம் விட்டுவிடுகிறோம் ஆனால் அதன்பின்னணி என்ன நலன்கள் என்ன ? பாதிப்புகள் என்ன ? என நாம் உடனடியாக புரிந்துக்கொள்ள முடியாது. அதைப்போல தேனியில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள் மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை சில இயக்கங்கள் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிக்கொண்டு இருக்கிறோம்.
கல்ப்பாக்கத்தில் அனுவுலை வந்தபோதும் நாம் அதை எதிர்க்கவில்லை.இன்றைக்கு நாம் எதிர்த்துகொண்டு இருக்கிறோம்.அப்படித்தான் இந்த ஸ்டெர்லைட் போராட்டமும். பொது மக்களிடம் விழிப்புணர்வு போதவில்லை அரசியல் விழிப்புணர்வு அறிவியல் விழிப்புணர்வு சுகாதார விழிப்புணர்வு போதவில்லை என்பதை பயன்ப்படுத்திக்கொண்டு இப்படிப்பட்ட ஆபத்தான திட்டங்கள் எல்லாம் ஆட்சியாளர்களாலும் பெரும்பணம் முதலைகளாலும் நம்மீது திணிக்கப்படுகின்றன .
டெல்டா மாவட்டங்களை முற்றிலும் சிதைக்ககூடிய வகையில் இப்போது மீத்தேன் ,ஹைட்ரோ கார்பன் ,என்ற பல்வேறு பெயர்களால் நிலத்தடியில் 2000 மீட்டருக்கு அடியில் கற்பாறைகளில் புதைந்து கிடக்கின்ற எரிவாயுக்களை உறிஞ்சி எடுப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் மக்கள் அங்கே போராடிக்கொண்டு இருக்கிறார்கள். நாம் காவெரியில் தண்ணீர் வரவில்லை என்று போராடிக்கொண்டு இருக்கிறோம் அதற்கும் மத்திய அரசு எதிராக இருக்கின்றன
ஒட்டுமொத்தத்தில் தமிழக மக்களை பாதிக்கிற வகையில் பல்வேறு அரசு திட்டங்கள் இங்கே எற்கனவே நிறுவப்பட்டுள்ளன புதிது புதிதாக திணிக்கப்படுகின்றன இவற்றையெல்லாம் எதிர்த்து போராடுவதற்கு மக்கள் தயாராக வேண்டும் . அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொறுப்பு இருக்கிறது என்று எண்ண வேண்டாம் உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் கட்சிகளை தாண்டி பொது மக்கள் நடத்திய போராட்டங்கள் தான் வெற்றிப்பெற்று இருக்கின்றன .
தூத்துக்குடியில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அணித்திரள்வோமேயானால் எந்த கொம்பனாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. மூன்று மாதகாலம் தொடர்ந்து போராடுகிற மக்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய வகையில் தான் இன்றைக்கு விடுதலைச்சிறுத்தைகள் இங்கே கூடியிருக்கிறோம் என தனது உரையை நிறைவு செய்தார் .