ஜூன் 18, டெல்லி;#தலைவர்_எழுச்சித்தமிழர்_அவர்கள்_டெல்லி_பயணமும்,#டெல்லியில்_செய்தியாளர்கள்_சந்திப்பும்:

…….

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் தேசத்தை பாதுகாப்போம் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களிடம் தேதி கேட்டு இருந்துதோம். அதற்கு அவர் தமிழக காங்கிரஸ் பொருப்பாளர் முகுல்வாஸ்னிக் சந்தித்து ஆலோசிக்க வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் இன்று (18-6-2018) காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் மற்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் திரு.முகுல்வாஸ்னிக் அவர்களை டெல்லியில் சந்தித்து மாநாடு குறித்து விவாதித்தோம். செப்டம்பர் முதல் வாரத்தில் மாநாட்டுக்கான தேதி கேட்டோம், அவர் தலைவர் ராகுல்காந்தி அவர்களையும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அவர்களையும் ஆலோசித்துவிட்டு இரண்டு ஒரு நாட்களில் தேதி உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.

மதவாத சக்திகளிடம் இருந்து இந்திய தேசத்தை பாதுகாப்போம் என்ற பொருளில் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது, இந்த மாநாட்டில் தேசிய அளவில் காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் தற்போது திமுக உடன் உள்ள 9 தோழமை கட்சி தலைவர்களையும் இந்த மாநாட்டிற்கு அழைக்க இருக்கிறோம். மேலும் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களையும் கலந்து கொள்வார். மதவாதத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகளும், இடதுசாரிகளும், முஸ்லிம் அமைப்புகளும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.

அகில இந்திய அளவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் சிதறாமல் ஒருங்கிணைந்து காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் திரள வேண்டும். மூன்றாவது அணி என்ற பெயரில் வாக்குகளை சிதறவிடாமல் ஒரே அணியாக பாஜக’விற்கு எதிராக ஒன்றிணைந்தால் மட்டுமே மதவாத சக்தியான பாஜகவை விழுத்த முடியும்.
இதற்கு இந்த மாநாடு பயன் உள்ளதாக அமையும்.

தமிழகத்தில் திமுக தலைமையில் 9 தோழமை கட்சிகள் ஓரணியில் இருக்கிறோம், இது தேர்தல் கூட்டணியாக அமைய வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பம். இதை போல் அகில இந்திய அளவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளும் காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக தான் தேசத்தை பாதுகாப்போம் மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைக்கிறது.

மகாராஷ்டிராவில் இரண்டு தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கி இருப்பது கொடுமையானது, வெட்ககேடு, மனித மாண்புக்கே எதிரான கேவலமான செயல் ஆகும். இப்படி நாடு தழுவிய அளவில் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகும் படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிள்ளது. இந்த தீர்ப்பு வந்து பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு இதற்க்கு ஒரு அவசர சட்டத்தை இதுவரை இயற்றவில்லை. SC/ST வன்கொடுமை சட்டத்தை வலுவிழக்கச் விட மாட்டோம் என கூறி வரும் மத்திய அரசு உடனே இதற்கு ஒரு அவரச சட்ட மசோதவை கொண்டு வர வேண்டும்.

சேலம் – சென்னை பசுமை சாலை திட்டத்தை மக்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள், அதன் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் கருத்து கூறினார் என்பதற்காகக் கைது செய்யும் இந்த தமிழக காவல்துறை ஏன் இன்னும் பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை. அப்படி என்றால் ஒருதலை பட்சமாக தமிழக அரசும், இந்த காவல்துறையும் செயல்படுகிறது என்பது மூலம் வெளிப்படையாக தெரிய வருகிறது.

.