தமிழகத்தை மத்திய அரசின் கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வருவதாக விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அனைத்துக் தரப்பினரும், பாஜகவை சேர்ந்தவர்களும் விமர்சிக்கக் கூடிய அளவிற்கு மோடி ஆட்சி நான்கு ஆண்டு காலம் கடந்துள்ளது. தமிழகத்தை மத்திய அரசின் கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வருகிறார்.

தூத்துக்குடியில் நடந்த படுகொலை சம்பவத்திலும் கூட மத்திய அரசின் தலையீடுகள் இருக்கிறது என்பதற்கு பல சான்றுகளை சொல்ல முடியும் என அவர் கூறியுள்ளார்