சுற்றறிக்கை
~~~~~~~~
நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி 2.7.2018 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கடந்த 14.6.2018 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் உயர்நிலைக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த ஆர்ப்பாட்டம் வரும் 4.7.2018 அன்று நடத்துவது என தள்ளிவைக்கப்படுகிறது.

தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதே நாளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் தழுவிய அளவில் ரயில் மறியல் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது. இந்த மறியல் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது. எனவே, சென்னையில் ஜூலை 2ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் ஜூலை 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் ரயில் மறியல் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திலும் முன்னணி பொறுப்பாளர்கள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விசிக.

சுற்றறிக்கை
~~~~~~~