விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சவூதி வாழ் தலித்-இசுலாமிய பேரவையின் சிறப்பு செயற்க்குழு கூட்டம்  அன்று 13.04.2018 மாலை 3 மணி அளவில்  தம்மாமில் ரஸ்த்த நூரா என்ற இடத்தில் தோழர் புருஷோத்தமன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக வெகு விமரிசையாக நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கா மு .கலீல் அவர்கள்  கலந்து கொண்டார் .மேலும் ரியாத்திலிருந்து தமிழ்ச் சங்கத்தின் சேலம் சிக்கந்தர் அவர்களும்,ரியாத் பகுதியின் திராவிட முன்னேற்றக் கழக பொருப்பாளர் புவனகிரி ஜாகீர் பாய் அவர்களும் இதில் கலந்து கொண்டு   சிறப்பித்தனர்.

 

சவூதி மண்டல ஒருங்கிணைப்பாளர்  மக்கா மு.கலீல் அமைப்பாய்த் திரள்வோம் புத்தகத்தை சவூதி சிறுத்தைகளுக்கு வழங்கி ,சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்திற்கு இத்தளத்தின் பொருளாளர் கல்லல் நாகலிங்கம், பாலசுப்ரமணியன், விடியல் வீரமுத்து , சாட்டையடி சடையகுமார் ,திருமா பரமசிவம்,காசிலிங்கம்,சிவ இராசன்,இம்தாதுல்லா,திலீபன்,சரண்,அய்யாசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் .

 

 

கடல் கடந்து சவூதி அரேபியாவுக்கு வந்து குடும்ப சூழ்நிலைகள் மிகவும் கஸ்டமாக இருந்த போதிலும் தலைவர் தொல்.திருமாவிற்காக தொடர்ந்து நாங்கள் பாடுபடுவோம் என்று ஒவ்வொரு சிறுத்தைகளும் சபதம் எடுத்துகொண்டனர்.