காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்வது மத்திய அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பெரியார் பற்றி அவதூறாக பேசிய ஹெச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்களின் போராட்டம் கண்துடைப்பாக இருக்கிறது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.