ரஜினிகாந்த் நடித்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ‘காலா’ இன்று தமிழகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியின் ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.இரஞ்சித், காலா படத்தையும் இயக்கியுள்ளதால், ரஜினி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னையின் முக்கியப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ‘காலா’ படத்தின் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. காலா படக்குழுவினர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் அவர்களுக்கு சிறப்பு திரையிடல் இன்று காலை சென்னை வடபழனி ஆர்.கே.வி ஸ்டுடியோவில் காண்பிக்கப்பட்டது .