இது ரமலான் நோன்பு மாதம். இஸ்லாமிய அன்பர்கள், தினமும் நோன்பு தொடங்குவதும் மாலையில் நோன்பு முடிப்பதும் என மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள்.காலையில் சூர்யோதயத்திற்கு முன்னரே சாப்பிட்டுவிடவேண்டும். மாலையில், சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் சாப்பிடவேண்டும். நடுவில் தண்ணீர் கூட அருந்தமாட்டார்கள்.இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த 13 ஆண்டுகாலம் கடைப்பிடித்து வருகிறார்கள்.

 

இந்த ஆண்டு முதல் நாளாக ஜூன் 2 ,நேற்று மதுரையில் சஹர் உணவோடு  ரமலான் நோன்பை தொடங்கினார் அன்று மாலை வடசென்னை பெரம்பூரில் இஃப்தார் நோன்பை முடித்தார். ஜூன் 3 – இரண்டாம் நாள் நோன்பை  இன்று விடியற்காலை 3 சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் தொடங்கினார்கள் .இந்நிகழ்வை  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சவூதி வாழ் தலித்-இசுலாமிய சனநாயகப் பேரவையின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

 

தலைவர் அவர்களோடு மார்க்க அறிஞர்களும், விசிக கட்சியின் முன்னணி நிர்வாகிகளும்,இசுலாமிய சனநாயக பேரவையின் பொருப்பாளர்களும், இஸ்லாமிய தோழர்களும் சேர்ந்து மிகச் சிறப்பான முறையில் சஹர் உணவு சாப்பிட்டு இரண்டாம் நாள் ரமலான் நோன்பை துவங்கினர் .