நடிகர் ரஜினிகாந்த், மக்களோடு நிற்பவர்களை சமூக விரோதிகள் என முத்திரை குத்துவது வலதுசாரி சிந்தனை என விடுதலை
சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் .
…………………………
 
தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய பின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,போராட்டத்தின் கடைசி கட்டத்தில் உள்ளே புகுந்து கெடுத்தது சமூக விரோதிகள்தான். ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரை தாக்கிய பின்புதான் பிரச்னையே தொடங்கியது. போலீஸ் உடையில் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்
 
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் கருத்துகளை கூறிய திருமாவளவன்,தமிழ்நாடு சுடுகாடாக ஆகிவிடக்கூடாது
என்பதற்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இதை உணர்வதற்கு, ரஜினிகாந்துக்கு சில காலம் தேவைப்படலாம். இப்போது
போராட்டத்தை அவர் எதிராக பார்க்கிறார். தீவிர அரசியலில் ஈடுபடும் போது ஆட்சி, அதிகாரம் எப்படி மக்களுக்கு எதிராக இருக்கிறது
 
என்பதை புரிந்துகொள்வார். இந்துத்துவ சக்திகளின் குரலை அவர் பிரதிபலிக்கிறார். யார் சமூக விரோதிகள் என்று அவர் குறிப்பிட்டுச்
சொன்னால், பின்னர் யார் சமூக விரோதிகள் என தெரியும். மக்களோடு மக்களாய் நிற்பவர்களை சமூக விரோதிகள் என முத்திரை
குத்துவது வலதுசாரி சிந்தனை. தற்போது அவர் ஆளும் வர்கத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார் என்றார்.