விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை 9 வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி மாநிலம் தழுவியளவில் உண்ணாநிலை அறப்போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இன்று காலை முதல் அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்ததலைவர் தோழர் நல்லக்கண்ணு காங்கிரஸ் முன்னால் தலைவர் அய்யா, திமுக முன்னால் நா.உ,R.S.பாரதி, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் உள்ளீட்ட தலைவர் சிறுத்தைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.
இறுதியாக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர்களுக்கு பழச்சாறு கொடுத்து அறப்போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.