ஜூலை 1, அரியலூர் கிராமம்:
*அங்கனூர் கோயில் குடமுழுக்கு விழாவில் தலைவர் .தொல்.திருமாவளவன் அவர்கள்

விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன்  அவர்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த அவர்கள் குடும்ப குலதெய்வம் மாயவன் திருக்கோயில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் அவர் பிறந்த சொந்த கிராமமான அங்கனூரில் இன்று (1-7-2018) நடைப்பெற்றது.

குடமுழுக்கு விழாவில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு ஊர் முதல் மரியாதையை ஏற்றுக்கொண்டு, ஊர் மக்கள் விருப்பபடி கோயில் கலசத்தில் தண்ணீர் சுற்றி வழிபாட்டை தொடங்கி வைத்தார்கள்.

அங்கனூர் கோயில் குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராக கடலூர் -திட்டக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் #கணேசன், விழுப்புரம் -ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் #வசந்தம்_கார்த்திகேயன், வடலூர் ஒ.பி.ஆர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் #செல்வராஜ், விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த்_சோடியார் ஆகிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.